உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க.வுக்கு ஒரு நிலையான கொள்கை கிடையாது

Published On 2023-09-02 07:12 GMT   |   Update On 2023-09-02 07:12 GMT
  • அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
  • ஒரே நாடு ஒரே தேர்தல்

நாகர்கோவில் :

நாகர்கோவில் கோண த்தில் தொழிற்பயிற்சி பள்ளி வளாகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி மைய புதிய கட்டிடம் ரூ.2.40 கோடியில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

புதிய கட்டிடத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., துணை மேயர் மேரி பிரின்சிலதா, மாநகராட்சி மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டு தலின்படி குமரி மாவட்ட த்தில் படித்த இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் வகையில் திறன் பயிற்சி மையம் அமைக்க ரூ.2 கோடியே 40 லட்சம் செலவில் தொழில்பயிற்சி மையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு துறைகளில் மூலமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் நடைபெற்று வருகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பாரதிய ஜனதா சொல்லி வருகிறது. இதனை அ.தி.மு.க. ஆதரிக்கிறது. பாரதிய ஜனதா எதை சொல்கிறதோ அதை ஆதரிப்பது தான் அ.தி.மு.க.வின் வழக்கம். அ.தி.மு.க.வை பற்றி சொல்வ தற்கு எதுவும் இல்லை. அவர்களுக்கு ஒரு நிரந்தர கொள்கை கிடையாது. அவர்கள் ஆட்சியில் இருந்தபோது ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை எதிர்த்தார்கள். ஆனால் இப்போது பாரதிய ஜனதா சொல்வதை கேட்டு ஆதரிக்கிறார்கள்.

பாரதிய ஜனதா வழி நடப்ப வர்கள் அ.தி.மு.க.வினர். அதனால் அ.தி.மு.க.வை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். பாரதிய ஜனதா நேர்மையான கட்சி, நேர்மையான ஆட்சி என்று கூறி வந்தது. தற்போது மத்திய அரசின் சி.ஏ.ஜி. அறிக்கையில் ரூ.7 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் சி.ஏ.ஜி. அறிக்கை பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பாரதிய ஜனதா கூறுகிறது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2ஜி விவகாரத்தில் சி.ஏ.ஜி. அறிக்கையை வைத்து தான் பாரதிய ஜனதாவினர் பெரிதாக பிரசாரம் செய்தார்கள். இப்போது அது மிகப் பெரிய ஊழல் என்று கூறி வந்தனர். அவர்களுக்கென்று வந்தவுடன் அதில் ஒன்று மில்லை என்று கூறுகிறா ர்கள். ஊழலற்ற நேர்மை யான ஆட்சி என்று கூறிவரும் பாரதிய ஜனதாவி னர் செய்துள்ள மிகப்பெரிய ஊழல் இதுவாகும். தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை இந்த ஊழல் குறித்து பதில் கூற வேண்டும்.

பால் கொள்முதல் முறையாக நடைபெற்று வருகிறது. பால் கொள்மு தலை அதிகரிக்க பால்வள த்துறை தேவை யான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News