உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளராக ராஜன் நியமனம்
- எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்
- அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி, பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி செயலாளராக உள்ளார்.
நாகர்கோவில் :
அ.தி.மு.க. கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். மாநில, மாவட்ட புதிய நிர்வாகிகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்து வருகிறார். வர்த்தக அணி மாநில இணை செயலாளராக நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ராஜன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. உடனிருந்தார். மாநில வர்த்தக அணி இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜன் நாகர்கோவில் ராஜன் மெடிக்கல் ஏஜென்சி உரிமையாளரும், கன்னியாகுமரி மாவட்ட மொத்த மருந்து வணிகர் சங்க தலைவரும், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி, பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி செயலாளராக உள்ளார்.