அழகப்பபுரம் அந்தோணியார் ஆலய தேர் பவனி
- தேர் பவனியில் திரளானோர் பங்கேற்பு
- திருவிழா ஏற்பாடுகளை பங்கு மக்கள் செய்திருந்தனர்.
நாகர்கோவில்:
அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.
10-ம் நாள் திருவிழா வான நேற்று வடக்கன்கு ளம் உதவி பங்குத்தந்தை, எழில் நிலவன் தேரடி திருப்பலியை நடத்தினார். காலை 5 மணிக்கு நடைபெற்ற பெருவிழா கூட்டு திருப்பலியை பங்கு பேரவையினர் சிறப்பித்தனர்.
வெள்ளமடம் அகஸ் தியர் முனி குழந்தைகள் நல மருத்துவமனை சேர்மன் கென்சன் தலைைம வகித்தார். காவல்கிணறு பங்குத்தந்தை ஆரோக்கி யராஜ் மறையுரை வழங்கினார். காலை 7 மணிக்கு மண்ணின் மைந்தர் குருக்கள் திருப்பலியை நிறைவேற்றினர். இரு அவை கன்னியர்கள் சிறப்பித்தனர்.
நண்பகல் 2 மணிக்கு தேர்பவனியும், இரவு 8.30 மணிக்கு தேரடி நற்கருணை ஆசீரும் நடைபெற்றது. தேர் பவனியில் பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் ஹில்மன் புரூஸ் எட்வின், அழகப்பபுரம் பேரூராட்சி தலைவர் அனிற்றா ஜெரார்டு, துணைத் தலைவர் ஆண்ட்ரூஸ் மணி, ஏர் பிளையிங் டிராவல்ஸ் அதிபர் ஜேம்ஸ் பிரிட்டோ, அன்னை ஏர் டிராவல்ஸ் உரிமையாளர் லாரன்ஸ், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் சகாய டென்னிஸ், சைலா ராணி, தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவிழா ஏற்பாடுகளை பங்கு தந்தை செல்வராயர், உதவி பங்குத்தந்தை ஜார்ஜ் ஆன்றனி, பங்கு பேரவை துணைத்தலைவர் விக்டர் நவாஸ், செயலாளர் ஞானம், பொருளாளர் டேவிட் ஜெயராஜ், இரு அவை அருட் சகோதரிகள், செயற்குழு, நிதிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.