குமரி மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளில் முதல் இடம் பிடித்த 500 மாணவ-மாணவிகளுக்கு விருதுகள்
- வசந்த் அன் கோ சார்பில் தமிழ்ச்செல்வி வசந்தகுமார், விஜய் வசந்த் எம்.பி. வழங்கினர்
- மாணவ-மாணவிகள் படித்து பட்டம் பெற்று பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.
நாகர்கோவில், ஆக.12-
வசந்த் அன் கோ சார்பில் குமரி மாவட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் பள்ளிகளில் முதலிடம் பிடித்த 500 மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடந்தது.
விழாவை வசந்த் அன்கோ நிர்வாக இயக்குனர் தமிழ்ச்செல்வி வசந்தகுமார், விஜய் வசந்த் எம்.பி. ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இதைத்தொ டர்ந்து சிறந்த மாணவ-மாணவிகளுக்கு கேடயங்க ளையும், பரிசுகளையும் வசந்த் அன் கோ நிர்வாக இயக்குனர் தமிழ்ச்செல்வி வசந்தகுமார், விஜய்வசந்த் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.
விழாவில் விஜய்வசந்த் எம்.பி.பேசியதாவது:-
குமரி மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டமாகும். இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து பட்டம் பெற்று பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.
மாணவர்கள் இவ்வளவு முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் கடுமையான உழைப்பு தான். அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், தாளாளர்கள், பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகள் மற்ற மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். அவர்கள் சக மாணவர்களையும் ஊக்குவிக்க வேண்டும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குவதை பெருமையாக கருதுகிறோம். இதற்கு முக்கிய காரணம் என்னுடைய அம்மா தான். அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய சகோதரனும் சகோதரியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இருந்தாலும் அவர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்ததற்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொ ள்கிறேன்.
மாணவர்கள் மென்மே லும் வளர வேண்டும். படிப்புடன் மட்டும் இருந்துவிடாமல் விளை யாட்டு உட்பட அனைத்து திறமைகளையும் மாண வர்கள் ஊக்குவிக்க வேண்டும். மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விளை யாட்டை ஊக்குவிக்கவும் வசந்த் அன் கோ சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நான் சிறு வயதாக இருந்தபோதே எனது தந்தை தொழில் விஷயமாக சென்றுவிடுவார். தற்பொழுது எங்களை விட்டு சென்று விட்டார். இருப்பினும் எங்களுடைய அம்மா தான் எங்களுக்கு முழு ஆதரவாக இருந்தார். அவருக்கு நான் நன்றி கடன் பெற்றுள்ளேன்.
மாணவர்கள் பெற்றோர்களை மறந்து விடக்கூடாது. இவ்வளவு கஷ்டப்பட்டு என்னை உயர்த்தியவர் என்னுடைய தாயார் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட் டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து வசந்த் அன்கோ நிர்வாக இயக்குனர் தமிழ்ச்செல்வி வசந்தகுமார் கூறுகையில், எனது கணவர் வசந்தகுமார் விட்டு சென்ற பணிகளை எனது மகன் விஜய்வசந்த் செய்வதை பெருமையாக கருதுகிறேன். மாணவர்கள் வாழ்க்கையில் பல்வேறு வெற்றிகளை பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். விழாவில் காங்கி ரஸ் மாநகர் மாவட்ட தலை வர் நவீன்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்