உள்ளூர் செய்திகள்

சபரிமலை சீசனை யொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் அழகுபடுத்தும் பணி

Published On 2023-11-15 06:38 GMT   |   Update On 2023-11-15 06:38 GMT
  • நடைபாதைகளில் அலங்கார தரை கற்கள் பதிக்கப்படுகிறது
  • ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் தரைப்பகுதி சமபடுத்தப்பட்டு அலங்கார தரை கற்கள் பதிக்கும் பணி

கன்னியாகுமரி :

கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிக அளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த சீசன் தான் கன்னியாகு மரியில் மெயின் சீசன் ஆகும். இந்த சீசன் காலம் சபரிமலை சீசன் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலங்களில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வரை கன்னியா குமரிக்கு வந்து செல்வா ர்கள்.

இந்த ஆண்டு சபரிமலை சீசன் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந் தேதி வரை 65 நாட்கள் நீடிக்கிறது. இந்த சீசனையொட்டி கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதா ரம், குடிநீர், மின்விளக்கு, கழிப்பிடம், கார் பார்க்கிங், சாலை வசதி உள்பட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணி களை கவரும் வகையில் அழகுப்படுத்தும் பணி நடக்கிறது. முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கட ற்கரை பகுதியில் மணல் பரப்பே தெரியாத அளவில் நடைபாதைகளில் பல வண்ண அலங்கார தரை கற்கள் பதிக்கும்பணி தொ டங்கி நடைபெற்று வருகிறது.

ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் தரைப்பகுதி சமபடுத்தப்பட்டு அலங்கார தரை கற்கள் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரு கிறது.

Tags:    

Similar News