ஆரல்வாய்மொழியில் இன்று காலை பாரதிய ஜனதா நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதம்
- 6 பேரும் தினமும் காலை, மாலை கோட்டார் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்
- போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கன்னியாகுமரி :
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து செட்டிகுளம் நோக்கி இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர்.
அப்போது பாரதிய ஜனதா அலுவலகம் முன்பு அமர்ந்து மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.அப்போது பிரதமர் மோடியை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பாரதிய ஜனதா அலுவலகத்தில் இருந்து வந்த பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் இரு தரப்பினரும் காயமடைந்த னர். இந்த மோதல் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்பட 22 பேர் மீதும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் டைசன், லாரன்ஸ் உட்பட 31 மீதும் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், நெல்லை மாவட்ட முன்னாள் தலைவர் மகாராஜன் மாவட்ட துணை தலைவர் சொக்கலிங்கம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் காங்கிரஸ் நிர்வாகிகள் டைசன், லாரன்ஸ், ஜோஸ்லின் ஜெலின் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப் பட்டனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் ஜாமீனில் விடுவிக்க கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த கோர்ட் 6 பேருக்கும் ஜாமீன் வழங்கியது. 6 பேரும் தினமும் காலை, மாலை கோட்டார் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறியிருந்தது. இதையடுத்து இன்று காலை பாளையங் கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் மற்றும் நிர்வாகிகள், காங்கிரஸ் நிர்வாகிகள் லாரன்ஸ், டைசன், ஜோஸ்லின் ஜெலின் ஆகிய6 பேரும் விடுவிக்கப்பட்டனர்.விடு விக்கப்பட்ட நிர்வாகிகள் பாளையங்கோட்டையில் இருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கு வந்தனர். இைதயடுத்து ஆரல்வாய்மொழியில் கூடுதல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், டி.எஸ்.பி.க்கள் நவீன்குமார், கிருஷ்ணமூர்த்தி, ராஜா, இன்ஸ்பெக்டர்கள் ராமர், கோபி அகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜுக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அப்போது போலீசார் நிர்வாகிகளை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாரதிய ஜனதா நிர்வாகிகளின் வாகனங் களையும் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட கார்களில் வந்திருந்தனர். 5 கார்களை மட்டுமே அனுமதிப்போம் என்று போலீசார் தெரி வித்தனர். மற்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். முதலில் 5 கார்கள் சென்ற பிறகு மற்ற கார்களை போலீசார் விடுவித்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பிரச்சினைகள் எதுவும் நடை பெறாமல் இருக்கும் வகையில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.