களியக்காவிளை அருகே செம்மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல் பா.ஜ.க. பிரமுகர் உட்பட 4 பேர் மீது வழக்கு
- கோழிவிளை பகுதியில் சிலர் செம்மண் கடத்து வதாக போலீசாருக்கு புகார் வந்தது.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமை யில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நாகர்கோவில் :பா.ஜ.க. பிரமுகர் உட்பட 4 பேர் மீது வழக்குகளியக்காவிளை அருகே கோழிவிளை பகுதியில் சிலர் செம்மண் கடத்து வதாக போலீசாருக்கு புகார் வந்தது. இந்தநிலை யில் இன்று காலை களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து செம்மண் கடத்து வதை பார்த்துள்ள னர். அந்த இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றுள்ளனர். ஆனால் போலீசாரை பார்த்த உடன் செம்மண் கடத்தலில் ஈடுபட்டவர்கள் அந்த இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டனர்.
பின்னர் டெம்போவை யும், கிட்டாச்சி எந்திரத்தை யும் பறிமுதல் செய்த போலீசார் வாகனங்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் செம்மண் கடத்தியதாக பா.ஜ.க.வின் முஞ்சிறை மேற்கு ஒன்றிய தலைவர் விஜில்குமார் மற்றும் படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த றோய், மடிச்சல் பகுதியை சேர்ந்த ஆபீஸ், களியக்காவிளை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.