உள்ளூர் செய்திகள்

சுற்றுலா பயணி தவற விட்ட 10 பவுன் நகையை மீட்டு போலீசில் ஒப்படைத்த தொழில் அதிபர்

Published On 2023-05-23 07:18 GMT   |   Update On 2023-05-23 07:18 GMT
  • நீண்ட நேரம் தங்க நகையை கோவில் வளாகம் முழுவதும் தேடினார்
  • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நடந்தது

கன்னியாகுமரி :

திருச்சி மாவட்டம் செங்கதிர் சோலை பகுதியை சேர்ந்தவர் அமுதா.இவர் 35 பேர் அடங்கிய குழுவி னருடன் நேற்று முன்தினம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளார்.

இவர்கள் காலையில் சூரிய உதய காட்சியை பார்த்துவிட்டு பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்போது கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் அமுதாவின் பர்ஸ் மற்றும் அதில் இருந்த 10 பவுன் தங்க நகையும் தொலைந்தது.பின்னர் நீண்ட நேரம் தங்க நகையை கோவில் வளாகம் முழுவதும் தேடினார்.

இதனையடுத்து அவர் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் அவர் தவறவிட்ட பர்ஸ் மற்றும் அதில்இருந்த தங்க நகையையும் பகவதி அம்மன் கோவில் வளாகத்தில் பிரசாத ஸ்டால் நடத்திவரும் ராமச்சந்திரன் என்பவர் மீட்டு கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி முன்னிலையில் ராமச்சந்தி ரன் சுற்றுலா பயணி அமுதா விடம் 10 பவுன் தங்க நகையை ஒப்படைத்தார்.

நகையை மீட்டு பெண் சுற்றுலா பயணியிடம் ஒப்படைத்த ராமச்சந்திரனுக்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News