உள்ளூர் செய்திகள்

கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவில் இன்று தேர் பவனி

Published On 2022-12-01 07:06 GMT   |   Update On 2022-12-01 07:06 GMT
  • 7-ம் திருவிழாவான நேற்று ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்
  • 9-ம் நாள் விழாவில் நாளை (2-ந்தேதி) மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு ஆராதனை

நாகர்கோவில் :

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வரும் 3-ந்தேதி சனிக்கிழமை வரை நடக்கிறது.

7-ம் திருவிழாவான நேற்று ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். 8-ம் நாள் திருவிழாவான இன்று (1-ந்தேதி) மாலை 6.30 மணிக்கு ஆம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட் டர் ரெமிஜியூஸ் தலைமை வகிக்கிறார். இரவு 10.30 மணி முதல் தேர் பவனி நடக்கிறது.

9-ம் நாள் விழாவில் நாளை (2-ந்தேதி) மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நச ரேன் சூசை தலைமையில் சிறப்பு ஆராதனை, நற்க ருணை ஆசீர் ஆகியன நடக் கிறது. இரவு 10.30 மணிக்கு தேர் பவனி நடக்கிறது.

10-ம் நாள் விழா டிசம்பர் 3-ந்தேதி நடக்கிறது. இதில் காலை 6 மணிக்கு பெரு விழா திருப்பலி கோட்டார் மறை மாவட்ட ஆயர் நச ரேன் சூசை தலைமையில் நடக்கிறது. தொடர்ந்து மலையாள திருப்பலி பேரருட்பணி கிளாடின் அலெக்ஸ் தலைமையில் நடக்கிறது. பின்னர் காலை 11 மணி முதல் தேர் பவனி யும், இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி யும் நடக்கிறது.

தேர் பவனியையடுத்து 3-ந்தேதி குமரி மாவட்டத் திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படடுள்ளது.

Tags:    

Similar News