உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி அருகே கோவில் திருவிழா இசை கச்சேரியில் மோதல்

Published On 2023-09-14 06:42 GMT   |   Update On 2023-09-14 06:42 GMT
  • 2 பேர் படுகாயம்; 9 பேர் மீது வழக்கு
  • 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி அருகே உள்ள ஆரோக்கியபுரம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருவிழாவை யொட்டி இசை கச்சேரி நடந்தது. அப்போது இரவு சுமார் 11 மணி அளவில் அதே பகுதியை சேர்ந்த பிரபாகரனுக்கும் ஜெய சூர்யா, கிஷோர், ஜெகன், ஆன்றனி உள்பட 5 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் 5 பேரும் சேர்ந்து பிரபாகரனை அவ தூறாக பேசி கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம்.

இதில் படுகாயம் அடைந்த பிரபாகரன் சிகிச்சைக்காக கன்னியா குமரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

இதுகுறித்து பிரபாகரன் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் ஜெய சூர்யா, கிஷோர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

இதேபோல் ஆரோக்கிய புரத்தை சேர்ந்த ஜெகன், ரகு, ராஜன், ஆன்றோ, பிரபாகரன் ஆகியோர் சேர்ந்து ஆன்றனியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஆன்றனி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஆன்றனி கன்னியாகுமரி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஜெகன், பிரபாகரன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்னியாகுமரி அருகே கோவில் திருவிழா இசை நிகழ்ச்சியில் கோஷ்டி மோதல் நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News