உள்ளூர் செய்திகள்

6 முதல் 12-ம் வகுப்புகள் இன்று திறப்பு

Published On 2023-06-12 08:56 GMT   |   Update On 2023-06-12 08:56 GMT
  • கோடை விடுமுறைக்கு பிறகு உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள்
  • குமரியில் அரசு பள்ளிகளில் இன்று புத்தகங்கள் வழங்கப்பட்டது

நாகர்கோவில் :

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2வரை உள்ள வகுப்புகள் இன்று திறக்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் சுமார் 687 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. ஒரு லட்சத்து 90 ஆயிரம் மாணவர்கள் இன்று பள்ளிக்கு வந்தனர். அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளி உட்பட அனைத்து தனியார் பள்ளிகளிலும் மாணவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

பள்ளிகள் திறக்கப்பட்ட தையடுத்து காலையிலேயே மாணவர்கள் பள்ளிக்கு வர தயாரானார்கள். கோடை விடுமுறைக்கு பிறகு முதல் நாள் பள்ளிக்கு வந்த பெரும்பாலான மாணவ மாணவிகளை அவரது பெற்றோர்கள் இருசக்கர வாகனங்களில் அழைத்து வந்து விட்டனர்.

பெரும்பாலான மாணவ -மாணவிகள் பள்ளி வாகனங்களிலும் அரசு பஸ்களிலும் பள்ளிக்கு வந்தனர். கோடை விடுமுறைக்கு பிறகு மாணவ - மாணவிகள் அனைவரும் உற்சாகமாக பள்ளிகளுக்கு வந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு தனது நண்பர்கள் மற்றும் தோழிகளை சந்தித்து பள்ளிகளில் உரையாடினார்கள்.

நாகர்கோவில் கவிமணி பள்ளி ,எஸ்.எல் .பி.பள்ளி உள்பட மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை வழிபாடுகள் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகள் வகுப்பறைகளுக்கு சென்றனர். கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல், கருங்கல் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களி லிருந்தும் மாணவர்கள் குதூகலத்துடன் பள்ளிக்கு புறப்பட்டு வந்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் பூக்கொடுத்து வரவேற்றனர்.

பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளான இன்று மாணவ- மாணவிகள் கோடை விடுமுறையில் நடைபெற்ற சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர்.

பெரும்பாலான அரசு பள்ளிகளில் இன்றைய மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட் டது. முதன்மை கல்வி அதிகாரி முருகன் மற்றும் தொடக்க கல்வி அதிகாரிகள் பள்ளிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஏற்கனவே மாணவ- மாணவிகளுக்கு புத்த கங்கள் வழங்கப்பட்டு இருந்தது.

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் நாளை மறுநாள் 14-ந் தேதி திறக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் சுமார் 387 பள்ளிகளில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

பள்ளிகளை திறப்ப தற்கான முன்னேற்பாடு பணிகளை அந்தந்த பள்ளி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பள்ளிகள் சுத்தம் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 1-ம்வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளை வரவேற்கவும் பள்ளிக்க ல்வித்துறை சார்பில் ஏற்பா டுகள் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News