உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் மேலும் ஒரு புதிய படகு தளம் அமைக்கும் பணி தீவிரம்

Published On 2023-11-23 07:24 GMT   |   Update On 2023-11-23 07:24 GMT
  • கடலில் 80 மீட்டர் நீளத்துக்கு 1140 சிமெண்ட் பிளாக்குகள் மூலம் நிரப்பப்படுகிறது
  • பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி விவேகா னந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை போன்றவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து ரசித்து வரு கிறார்கள்.

இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த படகுகளை நிறுத்து வதற்காக கன்னியாகுமரி வாவதுறை கடற்கரை பகுதியில் படகுத்துறை உள்ளது. இங்கு விவேகா னந்த கேந்திர பணியாளர்கள் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு பணிக்கு செல்வதற்காக பயன்படுத்தப்பட்டுவரும்"ஏக்நாத்"என்ற படகும் நிறுத்தி வைக் கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் வட்ட கோட்டைக்கு இயக்கப்படும் தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய 2 புதிய அதிநவீன சொகுசு படகுகளும் தற்போது படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. படகுத்துறையில் ஒரே இடத்தில் 6 படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் கடும் இட நெருக்கடி ஏற்பட்டு உள் ளது. இதனால் விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல் லும் மற்ற 3 படகுகளும் இந்த படகுத் துறைக்குள் வந்து செல்வ தற்கு மிகவும் சிரமப்படு கின்றன. சில சமயங்களில் விபத்துக்கள் நேரிட வாய்ப்பு கள் இருந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து படகு துறையில் ஏற்பட்டுஉள்ள இட நெருக்க டியை சமா ளிக்க படகுத் துறையின் தெற்கு பக்கம் உள்ள கடல் பகுதியில் கூடுதலாக ஒரு புதிய படகு தளம் அமைக்க சுற்றுலாத்து றை நடவ டிக்கை மேற்கொண்டு உள்ளது. புதிய படகு தளம் ரூ.7 கோடி செல வில் அமைக்க திட்டமிடப் பட்டு உள்ளது. இதற்கான திட்ட மதிப் பீட்டை மீன்வ ளத்துறை பொறியியல் பிரிவைச் சேர்ந்த பொறி யியல் வல்லு னர்கள் தயா ரித்து உள்ள னர்.

இதைத் தொடர்ந்து படகு தளம் அமைப்ப தற்காக 1140 சிமெண்ட் பிளாக்குகள் கன்னியா குமரிஅருகே உள்ள மாதவபுரம் பகுதியில் தயாரிக் கப்பட்டது. இந்த ஒவ்வொரு சிமெண்ட் பிளாக்குகளும் 4 டன் முதல் 7½ டன் வரை எடை கொண்டதாக அமைக்கப் பட்டு உள்ளது.

இந்த சிமெண்ட் பிளாக்குகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனரக வாகனங்களில் கிரேன் மூலம் ஏற்றப்பட்டு கன்னியா குமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுதுறை வளாகத்தில் கொண்டு வந்து வைக்கப் பட்டது.

இந்த நிலையில் புதிய படகு தளம் அமைக்கும் பணி தொடங்கிஉள்ளது. 80 மீட்டர் நீளம் (264அடி) 20 மீட்டர் அகலத்தில் இந்த புதிய படகு தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது." ட " வடிவில் இந்த புதிய படகு தளம் அமைக்கப்படு

கிறது. இதுவரை 150 சிமெண்ட் பிளாக்குகள் 40 டன் எடை திறன் கொண்ட ராட்சத கிரேன் மூலம் கடலில் இறக்கி வைக்கப்பட்டு உள்ளது.

கடலில் 3 மீட்டர் ஆழத்துக்கு இந்த சிமெண்ட் பிளாக்குகள் இறக்கி வைக்கப்பட்டு இந்த புதிய படகுதளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடலுக்கு அடியில் இந்த சிமெண்ட் பிளாக்கு களை இறக்கி வைக்கும் பணியை கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள 133 அடி உயரதிருவள்ளுவர் சிலையை நிறுவும் பணியில் ஈடுபட்ட இம்மானுவேல் அண்டர் வாட்டர் என்ஜினி யரிங் நிறுவனம் மேற் கொண்டு வருகிறது.

Tags:    

Similar News