வேலை வாங்கி தருவதாக நடந்த பண மோசடியில் வேறு சில நபர்களுக்கு தொடர்பு? - கைதான டெல்லி வாலிபர் ஜெயிலில் அடைப்பு
- நான் ரூ.25 லட்சத்து 27 ஆயிரம் பணம் கொடுத்தேன்.பணம் கொடுத்த பிறகு அவர்கள் எனக்கு வேலை எடுத்து தரவில்லை
- விசாரணை நடத்தியதில் ஆகாசுடன் மேலும் சில கூட்டாளிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
நாகர்கோவில்:
சுசீந்திரம் அருகே ஆண்டர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மெர்சலின் வயது 32. இவர் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறி யிருப்பதாவது:-
நான் கடந்த 2016-ஆம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்து வேலைக் காக ஆன்லைன் இணையதளத்தில் பதிவு செய்துள்ளேன். அப்போது சில எண்களில் இருந்து என்னை தொடர்பு கொண்ட நபர்கள் டெல்லியில் விமான நிலைய பராமரிப்பு பணிகள் காலியாக இருப்பதாகவும், அதில் எனக்கு வேலை வாங்கி தருவதாகவும் கூறினார்கள். இதற்காக நான் ரூ.25 லட்சத்து 27 ஆயிரம் பணம் கொடுத்தேன்.பணம் கொடுத்த பிறகு அவர்கள் எனக்கு வேலை எடுத்து தரவில்லை.தொடர்ந்து என்னை ஏமாற்றி வந்தனர்.
எனது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இது தொடர்பாக சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் வசந்தி, சப்- இன்ஸ்பெக்டர் அஜ்மல் ஜெனிப், பெர்லின் பிரகாஷ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை யில் மெர்சிலின் பணம் கொடுத்து ஏமாந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து டெல்லி விரைந்து சென்ற சைபர் கிரைம் போலீசார் டெல்லி ராமவிகார் பகுதி யைச் சேர்ந்த ஆகாஷ் (வயது 21) என்பவரை பிடித்தனர். பிடிபட்ட அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரை நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். ஆகாசிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது டெல்லியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறினார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் ஆகாசுடன் மேலும் சில கூட்டாளிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
அவர்களை பிடிக்க போலீசார் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.வேறு நபர்களிடம் ஏமாற்றி பணம் பறித்தார்களா என்பது குறித்தும் விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கைது செய்யப்பட்ட ஆகாஷை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.