உள்ளூர் செய்திகள் (District)

குமரி மாவட்டத்தில் தொடர் மழை

Published On 2022-07-29 09:31 GMT   |   Update On 2022-07-29 09:31 GMT
  • அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
  • திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. சுருளோடு பகுதியில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. அங்கு அதிகபட்சமாக 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

பூதப்பாண்டி, கன்னிமார், மாம்பழத்துறையாறு, திற்பரப்பு, ஆரல்வாய்மொழி, அடையாமடை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. நாகர்கோவிலில் நேற்று மாலை வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. ஆனால் மழை கண்ணாமூச்சி காட்டி விட்டு சென்று விட்டது. லேசாக சாரல் மழை மட்டுமே பெய்தது.

பேச்சுப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து மட்டுமே பாசனத்திற்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைகளில் இருந்து திறந்து விடப்பட் டுள்ள தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும் விட்டு விட்டு மழை பெய்வதாலும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 38.33 அடியாக உள்ளது அணைக்கு 548 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 584 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 62.35 அடியாக உள்ளது அணைக்கு 191 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 175 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 18.15, சிற்றாறு-2 நீர்மட்டம் 11.25, பொய்கை அணை 16.60, மாம்பழத்துறை அணை 29.04 அடி ஆகும் நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 6.60 அடியாக உள்ளது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு பேச்சுப்பாறை 5.8, பெருஞ்சாணி 17.8, சிற்றார்-1 2.4, பூதப்பாண்டி 12.4, கன்னிமார் 18.4, குழித்துறை 4, சுருளோடு 20, தக்கலை 6, பாலமோர் 15.4, மாம்பழத்துறையாறு 19, திற்பரப்பு 7.8, ஆரல்வாய்மொழி 2.2, கோழிப்போர்விளை 13.2, அடையாமடை 9, புத்தனாறு 17, ஆணைக்கிடங்கு 17.2

Tags:    

Similar News