உள்ளூர் செய்திகள் (District)

திற்பரப்பில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வணிக வளாக கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்

Published On 2022-06-18 07:14 GMT   |   Update On 2022-06-18 07:14 GMT
  • 21 கடைகள் கொண்ட இந்த வணிக வளாகத்தில் ஏலம் மூலம் ஒப்பந்தம்
  • கடைகளை மறு ஏலம் நடத்த காலி செய்து தரும்படி நிர்வாகம் கோரிக்கை

கன்னியாகுமரி :

திற்பரப்பு மகாதேவர் கோயில் வளாகத்திற்குட் பட்ட சுற்றுலா பகுதியில் குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகத்தின் கட்டுப்பாட் டில் வணிக வளாகம் உள்ளது.

21 கடைகள் கொண்ட இந்த வணிக வளாகத்தில் ஏலம் மூலம் ஒப்பந்தம் எடுத்து சிலர் வியாபாரம் செய்து வருகின்றனர். 15 கடைகள் வைப்பு தொகை மற்றும் மாத வாடகையில் தனி நபர்களுக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ள நிர்வாகத்தினர், 6 கடைகளுக்கு நன்கொடை தொகையுடன் மாதவாடகை பெற்று உரிமம் கொடுத்துள்ளனர்.

உரிமம் பெற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதும், கடைகளை மறு ஏலம் நடத்த காலி செய்து தரும்படி நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் கடைக்காரர்கள் மாத வாடகை கூடுதலாக பெற்று, தங்களுக்கே தொடர் அனுமதி வழங்க கேட்டுள்ளனர். இதற்கு நிர்வாகம் மறுப்பு தெரி வித்தது. இதனால் நன்கொடை கொடுத்து உரிமம் பெற்றவர்கள் நீதிமன்றம் சென்றனர். நன்கொடை பெற்று உரிமம் வழங்குவது சட்டத்தை மீறிய செயல் என்பதால், மாத வாடகை நிலுவை கணக்கிட்டு, நன்கொடையில் மீதி தொகையை உரிமம் பெற்றவர்களுக்கு திருப்பி கொடுக்கவும், தற்போது கடை உரிமம் பெற்றவர்கள் மறு ஏலத்தில் கலந்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் கடைகளில் தற்போது வர்த்தகம் செய்துவரும் அனைத்து நபர்களையும் வெளியேற்றி மறு ஏலம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. ஒப்பந்தகாலம் கடந்து வருடங்களாக வர்த்தகம் செய்து வருவதால் மேற்கொண்டு தொடர்ந்து உரிமம் வழங்க முடியாது என நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. நேற்று காலையில் குமரி மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில், கோவில் ஸ்ரீகாரியம் பத்மனாபபுரம் தொகுதி கண்காணிப்பாளர் செந்தில் குமார், குழித்துறை தொகுதி கண்காணிப்பாளர் ஆனந்த், நாகர்கோவில் தொகுதி கண்காணிப்பாளர் சிவகுமார், பொறியாளர் ஐயப்பன் உட்பட நிர்வாக பணியாளர்கள் சம்பவ இடம் வந்தனர் வெளியேற்றினர்.

அதிரடிபடை உட்பட பலத்த போலீஸ் பாது காப்புடன் கடைகளிலிருந்து வர்த்தகர்களை வெளி யேறவும், பொருட்களை வெளியேற்றி, கடையை அடைத்து சாவியை வழங்கவும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். ஆனால் முன் அறிவிப்பு இன்றி வெளியேற்றுவதற்கு கடைக்காரர்கள் மறுப்பு தெரிவித்தனர். வாடகை பாக்கி தவிர்த்து சட்டப்படி நிர்வாகத்திலிருந்து பணம் கிடைக்க வேண்டிய கடைக்கா ரர்களுக்கு உடனடியாக காசோலை வழங்கப்படும். நிர்வாகத்திற்கு தரவேண்டிய நபர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படும். ஆனால் எவரையும் தொடர்ந்து அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் உறுதியாக கூறினர்.

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வர்த்தகர்கள் சார்பில் வந்திருந்த வக்கீல் கள், நிர்வாக நடவடிக்கைகள் நீதிமன்ற அவமதிப்பாக உள்ளது என்றும், மீறி வெளியேற்றும் பட்சத்தில், வெளியேற்றப்படுவதாக எழுத்து மூலமாக ஆவ ணப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து திருக்கோவில் நிர்வாக வக்கீல் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். எழுதி கொடுத்து, மூன்று நபர்களுக்கு உரிய தொகைக்கான காசோலை கொடுத்து பிரச்சனையை சுமூகமாக முடிவிற்கு கொண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பானது.

Tags:    

Similar News