உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
- அறங்காவலர் குழு தலைவருமான பிரபா ராமகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்
- நாளை தொடங்கும் இந்த போட்டி வருகிற 14-ந் தேதி வரை நடைபெறுகிறது.
நாகர்கோவில் :
விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை யொட்டி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நாளை 10-ந்தேதி தொடங்குகிறது.
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைக்கிறார். விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும் அறங்காவலர் குழு தலைவருமான பிரபா ராமகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். மாவட்ட துணை அமைப்பாளர் மாணிக்கராஜா வரவேற்று பேசுகிறார் .
ஒன்றிய செயலாளர் பாபு,கன்னியாகுமரி பேரூராட்சிதலைவர் குமரி ஸ்டீபன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணைச் செயலாளர் நம்பி, துணைஅமைப்புச் செயலாளர் ஆஸ்டின் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். நாளை தொடங்கும் இந்த போட்டி வருகிற 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. கிரிக்கெட் போட்டியில் 47 அணிகள் பங்கேற்கிறது.
போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.25,000 கேடயமும் இரண்டாவது பரிசாகரூ. 15000 கேடயமும் மூன்றாம் பரிசாகரூ. பத்தாயிரம் கேடயமும் நான்காவது பரிசாக ஐந்தாயிரம் கேட யமும் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.