உள்ளூர் செய்திகள்

ஆசாரிபள்ளம் அருகே எண்ணை மில்லில் பயங்கர தீ விபத்து - ரூ.40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

Published On 2023-03-08 07:05 GMT   |   Update On 2023-03-08 07:05 GMT
  • வேம்பு, புங்கு, இலுப்பை, சில்க் காட்டன், மரவெட்டி, கருஞ்சுட்டி உள்பட பல எண்ணை வித்துக்கள்
  • எண்ணை வித்துக்கள் வைத்திருந்த குடோனும் வெடித்து சிதறி சேதம் ஆகியது

நாகர்கோவில் :

ஆசாரிபள்ளம் அருகே வெள்ள மண் ஓடை பகுதி யில் தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான எண்ணை மில் உள்ளது.

இங்கு வேம்பு, புங்கு, இலுப்பை, சில்க் காட்டன், மரவெட்டி, கருஞ்சுட்டி உள்பட பல எண்ணை வித்துக்கள் வியாபாரத்திற்கு அரைத்து வருகிறார் கள். இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.இந்த ஆலையில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்தில் அங்கிருந்த பொருட்கள் மற்றும் அரைத்து வைக்கப்பட்டு இருந்த எண்ணை மற்றும் புண்ணாக்கு அரைப்பதற்கு தேவையான மாட்டு எலும்பு தூள் உள்பட சுமார் 15 டன் பொருட்கள் தீயில் எரிந்து நாசம் ஆனது. எண்ணை வித்துக்கள் வைத்திருந்த குடோனும் வெடித்து சிதறி சேதம் ஆகியது. தீ கொழுந்து விட்டு எரிவதை பார்த்து அக்கம்பக்கத்தினர் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

நாகர்கோவில் தீய ணைப்பு வீரர்கள் உடனடி யாக சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக் குள் கொண்டு வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீ அணைக் கப்பட்டது. இருப்பினும் அந்த பகுதியில் புகை மண்ட லங்கள் வந்து கொண்டே இருந்தது.

தீ விபத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான எண்ணை வித்துக்கள் எண்ணை புண்ணாக்குகள் எரிந்து நாசமாகி உள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து ஆசாரிப் பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News