உள்ளூர் செய்திகள்

தேங்காப்பட்டணத்தில் ராட்சத எந்திரம் மூலம் மணல் அகழ்வு பணி - ஆய்வுக்கு சென்ற கலெக்டரிடம் மீனவ பிரதிநிதிகள் வலியுறுத்தல்

Published On 2022-08-18 08:48 GMT   |   Update On 2022-08-18 08:48 GMT
  • இரயுமன்துறை பகுதியில் புதிதாக சீரமைக்கப்படவுள்ள 630 மீட்டர் நீளமுள்ள மேற்கு பக்க அலைத்தடுப்பு சுவரின் தொடக்கப்பணி களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட் டது.
  • தங்கதடையின்றி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக மேற்கு பக்க அலைத்தடுப்பு சுவர் பணியினை மேற்கொண்டிடவும்

நாகர்கோவில் :

குமரி மாவட்ட மீனவளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்குட் பட்ட பகுதிகளில் நடை பெற்றுவரும் அலை தடுப்பு சுவர் அமைக்கும் பணி யினை கலெக்டர் அரவிந்த் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கடலோர பகுதிகளில் வசிக் கும் மீனவர்களின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-

தேங்காப்பட்டணம் மீன் பிடி துறைமுகத்திற்குட்பட்ட இரயுமன்துறை பகுதியில் புதிதாக சீரமைக்கப்படவுள்ள 630 மீட்டர் நீளமுள்ள மேற்கு பக்க அலைத்தடுப்பு சுவரின் தொடக்கப்பணி களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட் டது.

தேங்காப்பட்டணம் மீன் பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.

இந்த ஆய்வின்போது தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பயனீட்டாளர்களால் உடனடியாக தங்கதடையின்றி தேங்காப்பட்ட ணம் மீன்பிடி துறைமுக மேற்கு பக்க அலைத்தடுப்பு சுவர் பணியினை மேற்கொண்டிடவும், தற்போது மணல் அகழ்வு பணிக்காக கொண்டு வரப் பட்டுள்ள மணல் அகழ்வு இயந்திரத்திைன மாற்றி உடனடியாக ராட்சத மணல் அகழ்வு இயந்திரத்தினை வைத்து மணல் அகழ்வு பணி மேற்கொண்டிட மீனவ பிரதிநிதிகள் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

அதன் அடிப்படையில் மேற்படி பணிகளை விரைந்து முடித்திட செயற்பொறியாளர் மீன்பிடி துறைமுக திட்டக்கோட்டம், நாகர்கோவில் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாறு கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.

ஆய்வின்போது பத்மநாபபுரம் சார் ஆட்சியர் டாக்டர் அலர்மேல்மங்கை, துணை இயக்குநர் (மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை) காசிநாதபாண்டியன், மீன் பிடி துறைமுக திட்டக் கோட்ட செயற்பொறியாளர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை குளச்சல் உதவி இயக்குநர், தேங்காய்பட்ட ணம் மீன்பிடி துறைமுக திட்ட உபகோட்டம் உதவி செயற்பொறியாளர், கிள்ளியூர் தாசில்தார், தூத்தூர் மண்டல பங்குத் தந்தையர்கள், தேங்காப்பட் டணம் மீன்பிடி துறைமுக மேலாண்மை சங்க உறுப்பினர்கள், மீனவ பிரதிநிதிகள், பயனீட்டாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News