தென்தாமரைகுளத்தில் 600 ஆண்டுகள் பழமையான பெரியம்மன் கோவிலில் புனரமைப்பு பணிக்கு அடிக்கல் நாட்டு விழா
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள தென்தாமரைகு ளத்தில் 600 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பெரிய ம்மன் கோவில் உள்ளது. இங்கு பெரியம்மன், முத்தாரம்மன், மாரியம்மன், வெள்ளை மாரியம்மன், தோட்டுக்கா ரியம்மன், காவல் தெய்வமாக கருங்கடகார சாமி, எட்டு வீட்டு பிள்ளைமார் ஆகிய தெய்வங்கள் உள்ளன.
இந்த கோவிலில் சுமார் ரூ. 7 கோடி மதிப்பில் ராஜகோபுரத்துடன் கூடிய மறு புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது. கோவில் மூலஸ்தானம் மூன்றும், வெளிப்பிரகார மண்டபமும் கல் மண்ட பத்தால் அமைக்கப்ப டுகிறது. மறு புனரமைப்பு க்கான அடிக்கல் நாட்டு விழா இன்று கோவில் வளாகத்தில் நடை பெற்றது.
இதனையொட்டி அதிகா லை 4 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு திருவிளக்கு ஏற்றப்பட்டது. தொடர்ந்து கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடத்தப்ப ட்டது. காலை 7.30 மணி அளவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சி க்கு திருப்பணி குழு தலைவர் வழக்கறிஞர் தாமரை பாரதி தலைமை தாங்கினார். கோவில் நிர்வாக குழு தலைவர் ஜெகன் மற்றும் நிர்வாகிகள் திரு ப்பணி குழு உறுப்பி னர்கள் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதா கிரு ஷ்ணன், முன்னாள் தமிழக அமைச்சர் சுரேஷ்ராஜன், ஆவின் தலைவர் அசோகன், நாக ர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் முத்து ராமன், தி.மு.க. மாநில நிர்வாகிகள் வழக்கறிஞர் சிவராஜ், தில்லை செல்வம், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ராஜன் மற்றும் அனைத்து ஊர் தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.