உள்ளூர் செய்திகள்
பொங்கலுக்கு இலவசமாக வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் குமரி மாவட்டத்திற்கு வந்தது.
- தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது.
- குடும்ப அட்டை தரர்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகள் தாலுகா அலுவலகங்களுக்கு வரப்பட்டு பின்னர் வழங்கப்படும்.
நாகர்கோவில்: தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கரும்பு, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படுகிறது. குடும்ப அட்டை தரர்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகள் தாலுகா அலுவலகங்களுக்கு வரப்பட்டு பின்னர் வழங்கப்படும்.
இதுபோல் கரும்பு, சர்க்கரை,அரிசி உள்ளிட்ட பொருட்கள் நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பிக்கப்பட்டு பின்னர் ரேஷன் கடை மூலம் விநியோக செய்யப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள வேட்டி, சேலைகள் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தது. அதனை அலுவலகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு அறிவித்த உடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளது.