குமரி மாவட்டத்தில் 9 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்
- வருகிற 5-ந் தேதி பகல் 11 மணிக்கு நடைபெறும்.
- குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளின் ஜல் ஜீவன் இயக்கத்தின் முலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு வீடு தோறும் குடிநீர் என்ற நிலையை ஏற்படுத்திய ஊராட்சியாக 9 ஊராட்சிகள் அறிவிக்கப்படு கிறது.
அதன்படி அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரவிபுதூர் ஊராட்சி, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பறக்கை ஊராட்சி, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தலக்குளம் ஊராட்சி, தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்குறிச்சி மற்றும் முத்தலக்குறிச்சி ஊராட்சிகள், திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அருவிக்கரை, கண்ணனூர் மற்றும் ஏற்றக்கோடு ஊராட்சி, முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முஞ்சிறை ஊராட்சி ஆகிய 9 ஊராட்சிகளிலும் வருகிற 5-ந் தேதி பகல் 11 மணிக்கு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.
எனவே பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றுக் கொள்ளவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.