உள்ளூர் செய்திகள் (District)

குமரியில் 15 நாட்களில் கொரோனா பாதிப்பு 100-ஐ கடந்தது

Published On 2022-06-17 06:47 GMT   |   Update On 2022-06-17 06:47 GMT
  • முஞ்சிறை ஒன்றியத்தில் அதிகமானோர் பாதிப்பு
  • குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

முஞ்சிறை, திருவட்டார் ஒன்றியங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக முஞ்சிறை ஒன்றியத்தில் கொத்துக்கொத்தாக பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் முஞ்சிறை ஒன்றியத்தில் 15 பேருக்கு கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலா னோர் ஏற்கனவே பாதிக்க ப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். இதைத்தொடர்ந்து அவர்களும் தனிமைப் படுத்தப் பட்டுள்ள னர். முஞ்சிறை ஒன்றியத்தில் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அதிகா ரிகள் தீவிரப்படுத்தி உள்ள னர்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது. முஞ்சிறை ஒன்றியத்தில் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து அங்கு மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடுகள் சுகாதார பணிகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

நாகர்கோவில் மாநக ராட்சி பகுதியில் ஒருவ ருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. திருவட்டார் ஒன்றியத்தில் 5 பேர் பாதிப்புக்கு ள்ளாகி உள்ளனர். மாவட்டம் முழு வதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா ேசாதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 670 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. குமரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் மட்டும் 100 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குமரி மாவட்டத்தை யொட்டி உள்ள கேரளாவில் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து குமரி மாவட்டத்திலும் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் எல்லையோர பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகி றார்கள்.

மாவட்டம் முழுவதும் தற்போது தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ெமகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது இருப்பினும் குமரி மாவட்டத்தில் 2¾ லட்சம் பேர் முதல் கட்ட தடுப்பூசி செலுத்தாதது தெரியவந்துள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் குறிப்பிட்ட நாள்கள் கழித்த பிறகும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்தாமல் உள்ளனர் அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தாமல் உள்ளவர்கள் உடனடியாக அந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ளுமாறு சுகாதார துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Tags:    

Similar News