உள்ளூர் செய்திகள் (District)

குமரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 3 கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-09-19 09:04 GMT   |   Update On 2022-09-19 09:04 GMT
  • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.
  • கடந்த சில நாட்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.இருப்பினும் கஞ்சா புழக்கத்தில் இருந்து வரு கிறது.

இதை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. குமரி மாவட்டத்திற்கு குறிப்பாக ஆந்திராவில் இருந்து அதிக அளவு கஞ்சா பொருட்கள் புழக்கத்தில் வருவது போலீ சார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகிறார்கள்.கடந்த சில நாட்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கஞ்சா வழக்குகளில் கைது செய்பவர்களை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைத்து வருகிறார்கள்.

இந்த ஆண்டு இதுவரை 58 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 15 பேர் கஞ்சா வியா பாரிகள் ஆவர். இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 3 கஞ்சா வியாபாரி கள் குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளனர்.

நாகர்கோவில் வடசேரி போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதியில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்த மணி (வயது25), நாகர்கோவில் தெற்கு சூரங்குடியை சேர்ந்த அரவிந்த் பிரியன் (23), வடசேரி அருகுவிளையை சேர்ந்த சிவக்குமார் (21) ஆகிய 3 பேரும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இதில் சிவக்குமார் மீது ஏற்கனவே பல்வேறு வழக்கு கள் உள்ளது. எனவே 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் அரவிந்துக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் அரவிந்த் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மணி,அரவிந்த் பிரியன்,சிவக்குமார் ஆகிய 3 பேரும் நாகர்கோவில் ஜெயிலில் இருந்து பாளைய ங்கோட்டை ஜெயி லில் அடைக்கப்பட்டனர்.

இதுவரை இந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்து உள்ளது.

Tags:    

Similar News