உள்ளூர் செய்திகள் (District)

குமரி மாவட்டத்தில் கடைமடை பகுதிக்கும் தண்ணீர் செல்ல போர்க்கால அடிப்படையில் கால்வாயை சீரமைக்க வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மனு

Published On 2023-02-28 09:22 GMT   |   Update On 2023-02-28 09:22 GMT
  • கடை வரம்பு பகுதிக்கு முறையாக தண்ணீர் செல்ல வில்லை. தற்பொழுது அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது
  • கோதையாறு வடிகால் கோட்டத்தில் உள்ள கால்வாய்களை தூர்வார ரூ. 53 கோடியில் திட்ட மதிப்பு தயார்

நாகர்கோவில் :

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேஷ் குமார் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு-1 சிற்றாறு-2 அணைகளில் இருந்து விவசாயத்திற்கு ஆண்டு தோறும் ஜூன் 1-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டு பிப்ரவரி 28-ந் தேதி அணைகள் மூடப்படும். இந்த ஆண்டும் ஜூன் 1-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ஆனால் மாவட்டத்தில் உள்ள சேனல்களில் தண்ணீர் கடைமடை பகுதிகளை இன்று வரை போய் சேரவில்லை. குறிப்பாக கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கடை வரம்பு பகுதி வரை தண்ணீர் சென்று சேராமல் உள்ளது. பல இடங்களில் சானல்கள் சரிவர தூர்வாரப்படாத தால் மண் நிரம்பி காணப்ப டுகிறது. இதனால் கடை வரம்பு பகுதிக்கு முறையாக தண்ணீர் செல்ல வில்லை. தற்பொழுது அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. கடை வரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் வராததால் வாழை, தென்னை, மிளகு, கத்தரி பயிர் போன்ற பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசா யிகள் பாதிக்கப்பட்டு உள்ள னர்.

100-க்கும் மேற்பட்ட குளங்களும் தண்ணீர் இல்லா மல் உள்ளது. இதனால் பல கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வறண்டு காணப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து உள்ளது.

எனவே விவசாயிகள் நலன் கருதி வருகிற மார்ச் மாதம் 30-ந்தேதி வரை பேச்சிபாறை, பெருஞ் சாணி, சிற்றாறு-1, சிற்றாறு-2 அணைகளில் இருந்து விவசாயத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். கோதையாறு வடிகால் கோட்டத்தில் உள்ள கால்வாய்களை தூர்வார ரூ. 53 கோடியில் திட்ட மதிப்பு தயார் செய்யப்பட்டு ஆய்வுக்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

விரைவாக ஆய்வு பணிகளை முடித்து அரசுக்கு அறிக்கை வழங்கி போர்க்கால அடிப்படையில் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News