உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி அணைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு

Published On 2022-08-05 07:08 GMT   |   Update On 2022-08-05 07:08 GMT
  • பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42 அடியை எட்டுகிறது
  • பெருஞ்சாணி அணை மேலும் 2 அடி உயர்ந்தது

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் முழு வதும் கடந்த 5 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வந்த நிலையில் தற்போது மழை சற்று குறைந்துள்ளது.

மாவட்டம் முழுவதும் சாரல் மழை நீடித்து வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலையில் சாரல் மழை பெய்தது. கருங்கல், குளச்சல், இரணியல், கோழிப்போர்விளை, பூதப்பாண்டி, சுருளோடு, அடையாமடை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் சாரல் மழை நீடித்து வரு கிறது.

திற்பரப்பு அருவி பகுதி யில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதையடுத்து அங்கு குளு குளு சீசன் நிலவுகிறது. அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டி வருவதால் இன்று 5-வது நாளாக திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளிலும் மலையோரப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதையடுத்து அணை களின் நீர்மட்டம் கிடு கிடு வென உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ஒரு அடியும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 2 அடியும் உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.45 அடியாக உள்ளது. அணைக்கு 1783 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 256 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணை நீர்மட்டம் இன்று மதியம் 42 அடியை எட்டு மென்று எதிர்பார்க்கப் படுகிறது.

இதையடுத்து பொதுப்ப ணித்துறை அதிகாரி கள் அணையின் நீர்மட் டத்தை கண்காணித்து வரு கிறார்கள். அணை நீர்மட்டம் 42 அடியை எட்டியதும் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுப்பதற்கும் ஏற்பாடு கள் செய்யப்பட்டு உள் ளது. ஏற்கனவே சிற்றாறு-1, சிற்றாறு-2 அணை களின் நீர்மட்டம் 12 அடியை கடந்ததையடுத்து குழித்துறை ஆற்றின் கரை யோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பெருஞ்சாணி அணை யின் நீர்மட்டம் 67.85 அடியாக உள்ளது. அணைக்கு 1869 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பொய்கை அணை நீர்மட்டம் 17 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 35.52 அடியாகவும் உள்ளது.

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப் படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. அணை யின் நீர்மட்டம் இன்று காலை 12.10 அடியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் சாரல் மழை நீடித்து வருவ தால் சூறைக்காற்றும் வீசி வருகிறது. சூறை காற்றிற்கு மரங்கள் ஆங்காங்கே முறிந்து விழுந்துள்ளது. நாகர்கோவில் பாறையடி பகுதியில் பழமை வாய்ந்த ராட்சத மரம் முறிந்து விழும் நிலையில் இருந்தது.

இதை தீயணைப்பு துறையினர் வெட்டி அப்புறப்படுத்தி னார்கள். தோவாளை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் யாரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள்.

தச்சமலை, தோட்டமலை, மோதிர மலை பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. இதனால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வள்ளியாறு, குழித்துறையாறு, பரளி யாறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பேச்சிப்பாறை-11.4, பெருஞ்சாணி-3.2, சிற்றார்-1-6.2 சிற்றார்-2-2, பூதப்பாண்டி-5.2, கன்னிமார்-8.8, நாகர் கோவில்-2.4, சுருளோடு- 1.4, தக்கலை-3.4, குளச்சல்-8.6, இரணி யல்-6.2, பாலமோர்- 6.2, மாம்பழத்துறையாறு- 2.2, திற்பரப்பு-7.6, கோழிப்போர் விளை- 5.2, அடையாமடை-2.6, முள்ளங்கினாவிளை- 4.2, ஆணைக் கிடங்கு-3.4, முக்கடல்-3.2.

Tags:    

Similar News