உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி மீனவர்கள் வலையில் சிக்கிய 500 கிலோ எடையுள்ள 2 ராட்சத சுறாமீன்

Published On 2022-07-01 09:46 GMT   |   Update On 2022-07-01 09:46 GMT
  • சூறாவளி காற்றுக்கு இடையே மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய போது சிக்கியது.
  • ரூ.1 லட்சத்து10ஆயிரத்துக்கு ஏலம் போனது

கன்னியாகுமரி:

சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று சூறாளி காற்று வீசியதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில்இருந்து குறைந்த அளவு விசைப்படகுகள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.

இந்த சூறாவளி காற்றுக்கிடையே கன்னியா குமரியைச்சேர்ந்த விசை ப்படகு மீன வர்கள்வீசிய வலையில் 300 கிலோ எடைகொண்ட ராட்சத சுறாமீன் ஒன்று சிக்கியது.

அதேபோல 200 கிலோ எடை கொண்ட இன்னொரு சுறா மீனும் சிக்கியது. உடனே அவர்கள் அவசர அவசரமாக சின்ன முட்டம் துறைமுகத்துக்கு கரைதிரும்பினர்.

அதன் பிறகு அந்த 2 ராட்சத சுறா மீனை அவர்கள் படகில் இருந்து ராட்சத கிரேன் மூலம் இறக்கினர்.

அந்த ராட்சத மீனை மீன் வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். 300 கிலோ எடை கொண்ட சுறா மீன் ரூ.60 ஆயிரத்துக்கும் 200கிலோ எடை கொண்ட சுறாமீன்ரூ.50ஆயிரத்துக்கும் ஏலம் போனது.

பின்னர் அந்த 2 ராட்சத சுறா மீனையும் கிரேன் மூலம் தூக்கி லாரியில் வைத்து எடுத்து சென்றனர். மீன்பிடி தடைகாலம் முடிந்த பிறகு இப்போதுதான் இவ்வளவு பெரிய ராட்சத சுறாமீன் சிக்கி உள்ளது என்று மீனவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News