குலசேகரம் புனித அகுஸ்தினார் ஆலய விழாவில் இன்று மாலை தேர் பவனி
- புத்தன்கடை வட்டார முதன்மை பணியாளர் பென்னிலுக்காஸ் தலைமை தாங்கினார்.
- 8-ம் நாள் திருவிழாவில் புனித அகுஸ்தினார் ஆடம்பர தேர் பவனி நடைபெறும்.
திருவட்டார் :
குலசேகரத்தில் புகழ்பெற்ற புனித அகுஸ்தினார் ஆலய திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கியது. புத்தன்கடை வட்டார முதன்மை பணியாளர் பென்னிலுக்காஸ் தலைமை தாங்கினார்.
குழித்துறை மறை மாவட்ட செயலாளர் பேரருட்பணி ரசல்ராஜ், ஆலய பங்குதந்தை ஜோன்ஸ்கிளீட்டஸ், இணை பங்கு தந்தை சகாஜோபின், பங்கு பேரவை துணை தலைவர் ஜான்சன், செயலாளர் மேரி டெலரோஸ், பொருளாளர் மகேஷ், துணை செயலாளர் ஜெயசீலன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். 10 நாட்கள் நடைபெறுகிறது. 8-ம் நாள் திருவிழாவில் புனித அகுஸ்தினார் ஆடம்பர தேர் பவனி நடைபெறும்.
இந்த தேர் பவனியானது இன்று மாலையில் கோவிலில் இருந்து தொடங்கி உண்ணியூர், கோணம், ஆணைக்கட்டி வழியாக கான்வென்ட் பஸ் நிறுத்தம் சென்று அங்கிருந்து கோவிலின் பின்புறம் வழியாக அண்ணாநகர், அரசுமூடு, காண்வெண்ட் வந்து கோவில் சன்னதியில் நிறைவடையும். நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை மதியம் கோவிலில் வைத்து ஜாதி, மத பேதமன்றி அனைவருக்கும் சமபந்தி விருந்து நடைபெறுகிறது.