உள்ளூர் செய்திகள்

குமரி. கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை

Published On 2023-04-09 06:45 GMT   |   Update On 2023-04-09 07:24 GMT
  • கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை கலந்து கொண்டார்
  • அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை மற்றும் இயேசு உயிர்ப்பு சிறப்பு திருப்பலி

நாகர்கோவில், ஏப். 9-

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர் பெற்ற நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள்.

அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் அனைவரும் புத்தாடைகள் அணிந்து ஆலயங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி ஆகியவற்றில் கலந்து கொள்வார்கள். இத்தகைய தினம் கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான நாளாகும். இந்த ஆண்டின் ஈஸ்டர் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது.

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை மற்றும் இயேசு உயிர்ப்பு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

கோட்டார் சவேரியார் பேராலயத்தில் நேற்று இரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு இயேசு உயிர்ப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை கலந்து கொண்டார்.பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தி திருப்பலி நிறைவேற்றினார். அப்போது அங்கிருந்த கிறிஸ்தவர்கள் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி இயேசு வாழ்த்து பாடினார்.நாகர்கோவில் அசிசி ஆலயத்தில் இன்று காலையில் சிறப்பு திருப்பலி நடந்தது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி புனித அலங்கார உபகர மாதா ஆலயம் குளச்சல் காணிக்கை மாதா ஆலயம் வெட்டூர்ணிமடம் கிறிஸ்துவ அரசர் ஆலயம் உட்பட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் இன்று காலை நடந்த பிரார்த்தனையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஈஸ்டர் பண்டிகையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்கள்.

இதையடுத்து கடற்கரை கிராமங்கள் களை கட்டி இருந்தது. நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை அனைத்து மீனவ கிராமங்களிலும் ஈஸ்டர் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News