உள்ளூர் செய்திகள் (District)

மாலைமலர் செய்தி எதிரொலி திங்கள் நகர் பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்கள் நுழைய தடை

Published On 2022-07-17 06:37 GMT   |   Update On 2022-07-17 06:37 GMT
  • தனியார் வாகனங்கள் ஓட்டி வருகிறவர்களிடம் உள்ளே வாகனங்கள் வரக் கூடாது என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும்
  • பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்கள் நுழைய விடாமல் பேரூராட்சி ஊழியர்கள் காலை முதல் இரவு வரை பணியாற்றினார்கள்

கன்னியாகுமரி :

திங்கள் நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் தனியார் வாகனங்கள் நுழைய தடை செய்ய வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள வர்த்தகர்கள் பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோசுக்கு புகார் மனு அளித்தனர்.

இச்செய்தி மாலை மலர் நாளிதழில் வெளியானது இதனை அடுத்து திங்கள் நகர் பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் பேரூந்து நிலையத்தில் இருபுறமும் தனியார் வாகனங்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது என்று நோட்டீஸ் ஓட்டுவதற்கு உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி பஸ் நிலையத்தில் இருபுறமும் ஊழியர்கள் மூலம் தனியார் வாகனங்கள் ஓட்டி வருகிறவர்களிடம் உள்ளே வாகனங்கள் வரக் கூடாது என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறலாம் என்று உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, குளச்சல் துணை சூப்பிரண்டு, இரணியல் காவல் துறையி னருக்கு திங்கள்நகர் பஸ் நிலையத்தில் உள்ளே தனியார் வாகனங்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்றும் மீறினால் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் கடிதம் அனுப்பி வைத்தார்.

இதனையடுத்து திங்கள் நகர் பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்கள் நுழைய விடாமல் பேரூராட்சி ஊழியர்கள் காலை முதல் இரவு வரை பணியாற்றினார்கள். இதனால் பொது மக்கள் பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோஸின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News