உள்ளூர் செய்திகள்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் முழு வீச்சில் திருப்பணிகள்

Published On 2023-10-11 06:53 GMT   |   Update On 2023-10-11 06:57 GMT
  • அறங்காவலர் குழுவினர் ஆய்வு
  • பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வரும் தை மாதம் கலசாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

மணவாளக்குறிச்சி :

குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில் களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. பெண்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. கடந்த 2021 ஜூன் 2-ந்தேதி இக்கோவிலின் கருவ றைக்கூரை திடீரென தீப்பி டித்து எரிந்தது.

இதையடுத்து கோவிலில் தற்காலிகமாக மேற்கூரை அமைக்கப்பட்டது. தொடர்ந்து ஜூன் 14- ந்தேதி தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டது. தேவ பிரசன்னத்தில் ஆகம விதி மாறாமல் திருப்பணிகள் செய்ய வேண்டும் என கூறப்பட்டது. இதையடுத்து ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து இதற்காக தேவசம் பள்ளி வளாகத்தில் மர தச்சு தொழிலாளர்கள் முழு மூச்சில் மரப்பணி செய்து வந்தனர். மேற்கூரை பணிக்கு உத்திரம்,பட்டியல் கூட்டும் பணி நிறைவடைந்து உள்ளது. இதையடுத்து மூலஸ்தான மேற்கூரைக்கு திருப்பணிகள் திருக்கோயில் வளாகத்தில் நடந்து வருகிறது. வெளி சுற்று பிரகாரத்தில் உள்ள மர அழிகள் மற்றும் 9 அடி உயரத்தில் 14 கல் தூண்கள் நிறுவும் பணிகள் கடந்த மாதம் 22 ம் தேதி தொடங்கி யது. தூண்கள் நிறுவும் பணிகள் நிறை வடைந்து உள்ளது. தொடர்ந்து பழமை மாறாமல் மர அழிகள் அமைக்கும் பணி களும் நடந்து வருகிறது. அழிகள் அமைக்கும் பணி நிறைவடைந்ததும், அதன் மேல் உத்திரங்கள் நிறுவப் பட்டு, அதற்கு மேல் மேற்கூரை அமைக்கும் பணிகள் தொடங்கும். இதற்கு பயன்படுத்தும் மரங்கள் தேக்கு மரத்தி லானது என்பது குறிப்பி டத்தக்கது.

இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வரும் தை மாதம் கலசாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தச்சுப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகளை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். கோயில் ஸ்ரீகாரியம் செந்தில் குமார், மராமத்து பொறி யாளர் அய்யப்பன், அறங்கா வல் குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News