உள்ளூர் செய்திகள்

ரோகிணி பொறியியல் கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டுதல் பயிற்சி

Published On 2023-09-24 07:46 GMT   |   Update On 2023-09-24 07:46 GMT
  • “நீயா நானா” கோபிநாத் கலந்து கொண்டு மாணவர்கள் இடையே கலந்துரையாடினார்
  • மாணவர்களுக்கிடையே வெற்றி பெற வேண்டும் என்ற தூண்டு தலையும் ஏற்படுத்தினார்.

நாகர்கோவில் :

அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந் துள்ள ரோகிணி பொறி யியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இளநிலை பொறியியல் முதலாம் ஆண்டு மாணவ மாணவி களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். பேராசிரியை தங்கம் வரவேற்புரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தனியார் டிவி புகழ் "நீயா நானா" கோபிநாத் கலந்து கொண்டு மாணவர்கள் இடையே கலந்துரையாடினார்.அப்போது அவர் நேரத்தின் முக்கியத்து வம் பற்றியும், மன அழுத்தத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது பற்றியும், தன் துறையில் தனித்துவம் பெற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைத்து, மாணவர்களுக்கிடையே வெற்றி பெற வேண்டும் என்ற தூண்டு தலையும் ஏற்படுத்தினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களைமுதலாம் ஆண்டு துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர், பேராசிரியை செய்து இருந்தனர். முடிவில் பேராசிரியை ஜார்ஜ் மேரி ஆர்த்தி நன்றி கூறினார்.

Tags:    

Similar News