உள்ளூர் செய்திகள் (District)

நாகர். கல்லூரி வளாகத்தில் பேராசிரியரை தாக்கிய 4 மாணவர்கள் மீது வழக்கு

Published On 2023-01-26 08:05 GMT   |   Update On 2023-01-26 08:05 GMT
  • மாணவர்கள் சிலர் கோ-கோ விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் மாணவி ஒருவருடன் சேர்ந்து சென்று கொண்டிருந்தார்.
  • இந்திய தண்டனை சட்டம் 294பி 323, 506 (11) ஐபிசி ஆகிய 3 பிரிவு களில் வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ளது.

நாகர்கோவில், ஜன.26-

நித்திரவிளை பகுதியைச் சேர்ந்தவர் அகில் (வயது 44). இவர், நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் உடற்கல்வி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று அகில் கல்லூரியில் உள்ள மைதானத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது மாணவர்கள் சிலர் கோ-கோ விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் மாணவி ஒருவருடன் சேர்ந்து சென்று கொண்டிருந்தார்.

இதை பார்த்து கோ-கோ விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் கேலி கிண்டல் செய்தனர். இதனால் கோபமடைந்த மாணவன் அபினேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து கோ-கோ விளையாடிக் கொண்டிருந்த மாண வர்களை தாக்கியதாக தெரிகிறது. இரு தரப்பு மாணவர்களும் மாறி மாறி தாக்கி கொண்டனர்.

அப்போது அங்கு நின்ற உடற்கல்வி பேராசிரியர் அகில் அதை தடுத்தார். அப்போது அவரையும் தாக்கினார்கள்.இதில் அகில் படுகாயம் அடைந்தார்.மேலும் மாணவன் ஜான் கிறிஸ்டோபருக்கும் காயம் ஏற்பட்டது. இதை யடுத்து பேராசிரியர் அகில், மா ணவன் ஜான் கிறிஸ்டோபர் இருவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நேசமணி நகர் போலீசில் அகில் புகார் செய்தார். புகாரின் பேரில் அபி னேஷ், ஆன்றனி செல்வின், கிறிஸ்டின் ஆபிஸ், ஜான் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 294பி 323, 506 (11) ஐபிசி ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News