நாகர்கோவில் மாநகர தி.மு.க. கூட்டம் நடந்தது
- கட்சி பணி செய்யாதவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை
- மேயர் மகேஷ் எச்சரிக்கை
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஒழுகின சேரி மாவட்ட தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நாகர்கோவில் மாநகர, மாவட்ட பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. மாநகர அவைத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாநகர துணை செயலாளர்கள் துணை மேயர் மேரி பிரின்சி லதா, வேல்முருகன், ராஜன், மாநகர செயலாளர் ஆனந்த், பொருளாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர்களான மண்டல தலைவர் ஜவகர், ஷேக்மீரான், துரை மற்றும் சி.டி.சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநகர செயலாளர் ஆனந்த் சிறப்புரை ஆற்றி னார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொறுப்பாளர் மேயர் மகேஷ் கூறியதாவது:-
ஒவ்வொரு வட்டத்திற்கும் 6 நிர்வாகிகள் நியமிக்கபட் டுள்ளனர். எனவே இந்த குழு மக்கள் மத்தியில் தீவி ரமாக பணியாற்றினால் கட்சி மேலும் வலுப்பெறும்.
ஒவ்வொரு பகுதி வட்ட செயலாளரும் அவர்கள் வார்டுகளில் குடிநீர் நல்லி பழுது, தண்ணீர் பிரச்சினை போன்றவற்றை என்னிடம் தெரிவிக்கலாம். தற்போது மாற்று கட்சி கவுன்சிலர்கள் அழைத்து நான் சென்று பார்வையிடுகிறேன். இதனை தி.மு.க. வட்ட செயலாளர் கள் பயன்படுத்தினால், மக்களிடம் நற்பெயர் பெற்று கவுன்சிலராக வெற்றி பெற முடியும். கட்சி பணி ஆற்றாத யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், கலைஞர் முழு உருவ வெண்கல சிலை அமைக்க அனுமதி அளித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்வது உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.