உள்ளூர் செய்திகள்

கடலில் மீன்பிடிப்பதற்காக மீனவர்கள் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல தேசிய அடையாள அட்டை

Published On 2023-09-01 07:29 GMT   |   Update On 2023-09-01 07:29 GMT
  • மத்திய மந்திரி எல். முருகன் பேட்டி
  • “சாகர்மாலா பரிக்கிரமா” திட்டம் 6 மாதங்களுக்கு முன்பு குஜராத் மாநிலம் மாண்டியாவில் தொடங்கப் பட்டது.

கன்னியாகுமரி :

மத்திய மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைமந்திரி புருஷோத்தம்ரூபாலா, இணை மந்திரிஎல்.முருகன் ஆகியோர் "சாகர்மாலா பரிக்கிரமா"என்ற கடல் பயணநிகழ்ச்சியின் மூலம் நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள கட ற்கரை கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து மீனவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த நிகழ்ச்சி முடித்துவிட்டு மத்திய மந்திரிகள் நேற்று இரவு கன்னியாகுமரியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தனர். இன்று அதிகாலை 6.30 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

அங்கு வந்தமத்திய மந்திரிகளை நாகர்கோ வில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் வரவேற்ற னர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் மத்திய மந்திரி கள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பயபக்தி யுடன் சாமி கும்பிட்டனர்.

கோவிலில் உள்ள காலபைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, தியாக சவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்துஉள்ள பகவதி அம்மன் சன்னதி, இந்திர காந்தவிநாயகர் சன்னதி, பாலசவுந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்ம சாஸ்தா அயப்பன் சன்னதி, ஸ்ரீ நாகராஜர், சூரிய பகவான் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு சென்றனர்.

அங்குஉள்ள மூலஸ்தான கருவறையில் அமைந்துஉள்ள சிவன் பிரம்ம விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே லிங்க வடிவத்தில் காட்சி அளிக்கும் தாணுமாலய சாமியை தரிசனம் செய்தனர். திருவேங்கட விண்ணவர பெருமாள், 18அடிஉயர ஆஞ்சநே யர்உள்பட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி மீன்வளத் துறை இணை மந்திரி முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல்படி கடல் வழியாக சுற்றுப்பயணம் செய்து மீனவர்களை சந்திக்கும் "சாகர்மாலா பரிக்கிரமா" திட்டம் 6 மாதங்களுக்கு முன்பு குஜராத் மாநிலம் மாண்டியாவில்தொடங்கப் பட்டது. இந்தயாத்திரையில் பிரதமர்மோடிகொண்டு வந்த திட்டங்களை மீனவர்க ளிடம் நேரடியாக எடுத்துச் செல்வதும்.

மீனவர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து உரையாடுவதுதான் இதன் நோக்கம்ஆகும்.மீன்வளத் துறையில் ரூ.38ஆயிரத்து 500 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுஉள்ளது. இந்த துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

இறால் ஏற்றுமதியில் இந்தியா2-வது இடத்தில் உள்ளது. கடல் உணவு ஏற்றுமதியில் உலகில் 4- வது இடத்தில் உள்ளோம். இந்திய பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகி சென்றுகொண்டி ருக்கிறது. இந்தியாவில் மொத்தம் 8ஆயிரம்கிலோ மீட்டர் கடற்கரையில் 3ஆயிரம்கிலோ மீட்டர் தூரம் சென்று உள்ளோம்.

இன்னும் 5ஆயிரம்கிலோ மீட்டர் தூரம் செல்ல உள்ளோம்.கன்னியாகுமரி மாவட்டத்தில்தேங்காப் பட்டணம், தூத்தூர், குறும்பனை, குளச்சல், முட்டம், வாணியக்குடி என பல பகுதிகளுக்கு சென்று வந்தோம்.

இதனைத் தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்துக்கு செல்ல உள்ளோம். சுதந்திரத்துக்கு பிறகு மீனவர்களை செங்கோட்டைக்கு அழைத்து உரையாற்றியது பிரதமர் மோடிதான். ஆழ்கடலில் மீன் பிடிக்க ஏற்கனவே 50 படகுகளுக்குமானியம் கொடுக்கப்பட்டுஉள்ளன.

பாரம்பரிய மீன்பிடி தொழிலை ஊக்குவிக்க ரூ.1 கோடி 30 லட்சம் மதிப்புள்ள படகுகளுக்கு அரசு மானியம் வழங்குகிறது. ஐ.எஸ்.ஆர்.ஓ. மூலம் மீன்பிடி தொழிலை நவீனப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மீனவர்கள் கடல் வழியாக எந்த மாநிலத்துக்கும் செல்வதற்காக கோரிக்கை வைத்துஉள்ளனர். மாநிலம் விட்டு மாநிலம் செல்ல மீனவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட உள்ளது.

இவ்வாறுமத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.

Tags:    

Similar News