உள்ளூர் செய்திகள்

நெய்யூர்-பரம்பை ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும்

Published On 2023-09-05 07:07 GMT   |   Update On 2023-09-05 07:07 GMT
  • குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
  • குருந்தன்கோடு மேற்கு ஒன்றியம் சார்பில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சீருடையில் கலந்து கொள்வது

இரணியல் :

குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பேரூர் செயலாளர்கள் கூட்டம் திங்கள்நகரில் நடந்தது. அவைத்தலைவர் ஆன்றோ சர்ச்சில் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முருகன், ரமணிரோஸ், விஜயன், ஏசு ரெத்தினராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். மாநில பொதுக் குழு உறுப்பினர் ஜாண்லீபன், பேரூர் செயலாளர்கள் சுஜெய் ஜாக்ஸன், சேவியர் ஏசுதாஸ், ராஜூலின் ராஜகு மார், சகாய கிறிஸ்துதாஸ், மாவட்ட பிரதிநிதிகள் ஜெய சீலன், வைகுண்டதாஸ் உட்பட பலர் கலந்துகொண்ட னர். நெய்யூர் பேரூராட்சி தலைவி பி.வி பிரதீபா நன்றி கூறினார்.

கூட்டத்தில் இளைஞர் அணியினரை ஊக்குவிக்கும் வகையில் இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோச னைகள் வழங்க குமரிக்கு வருகை தரும் இளைஞரணி செயலாளரும், அமைச்சரு மான உதயநிதி ஸ்டாலினின் நிகழ்ச்சியில் திரளான இளை ஞர்கள் கலந்துகொள்வது. டிசம்பர் 17-ந்தேதி சேலத்தில் நடைபெறும் மாநாட்டில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றியம் சார்பில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சீருடையில் கலந்து கொள்வது, போக்குவரத்து சுங்கச்சாவடி கட்டணத்தை பல மடங்கு உயர்த்திய மத்திய அரசுக்கு கண்டனம் தெரி வித்துக்கொள்வது, மந்தமாக நடந்து வரும் நெய்யூர்-பரம்பை ரெயில்வே மேம்பால பணியால் பல்வேறு விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. எனவே தண்டவாள விரிவாக்கம் மற்றும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க தென்னக ரெயில்வே துறையை கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

Tags:    

Similar News