உள்ளூர் செய்திகள்

இன்று புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் கூட்டம் அலைமோதியது - பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

Published On 2022-09-24 07:13 GMT   |   Update On 2022-09-24 07:13 GMT
  • புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்
  • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது

நாகர்கோவில் :

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி ஆனந்தம் கிடைக்கும் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.

இதனால் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

2 ஆண்டு களுக்குப் பிறகு புரட்டாசி சனிக்கிழமையான இன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெரு மாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவிலில் இன்று காலையில் பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. பெருமாளை தரிசிப்பதற்காக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலிலும் இன்று காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவி லில் காலை முதலே பக்தர் கள் வந்து பெருமாளை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். கன்னியாகுமரி விவேகானந்தர் கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவிலி லும் இன்று காலையில் சுப்ரபாத தரிசனம், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழி பாடுகளும், தீபாராதனை களும் நடந்தது.

திருப்பதிசாரம் திருவாள் மார்பன் கோவிலில் காலையில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் காண் பிக்கப்பட்டது. பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், சுசீந்திரம் துவா ரகை கிருஷ்ணன் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள கிருஷ்ண சாமி கோவில், கோட்டார் வாகையடி தெருவில் உள்ள ஏழாகரம் பெருமாள் கோவில், வட்ட விளை தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று காலையில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள், பூஜை கள் நடந்தது.

பெருமாளை தரிசிப்ப தற்காக காலை முதலே பக்தர்கள் கூட்டம் கோவில்களில் நிரம்பி வழிந்தது.

Tags:    

Similar News