உள்ளூர் செய்திகள்

மத்திய மந்திரி பியூஷ் கோயலை முன்னாள் அமைச்சர்கள் தளவாய்சுந்தரம், கடம்பூர் ராஜூ ஆகியோர் சந்தித்தபோது எடுத்த படம்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை தடை செய்ய வேண்டும்

Published On 2022-10-17 07:10 GMT   |   Update On 2022-10-17 07:10 GMT
  • மத்திய மந்திரி பியூஷ் கோயலிடம் முன்னாள் அமைச்சர்கள் தளவாய்சுந்தரம், கடம்பூர் ராஜூ கோரிக்கை
  • உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.

நாகர்கோவில்:

சென்னையில் மத்திய மந்திரி பியூஷ் கோயலை முன்னாள் அமைச்சர்கள் தளவாய்சுந்தரம், கடம்பூர் ராஜூ ஆகியோர் கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன் சென்று நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதில், சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை தடை செய்யவேண்டும்.

தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கின்ற வகையிலும் தீப்பெட்டி தொழிலை பேணி காக்கின்ற வகையிலும் இந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டுமென வலியுறுத்தி இருந்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.

Tags:    

Similar News