உள்ளூர் செய்திகள் (District)

சுதந்திர தினத்தையொட்டி குமரியில் 2 ஷிப்டுகளாக போலீசார் கண்காணிப்பு

Published On 2022-08-14 07:13 GMT   |   Update On 2022-08-14 07:13 GMT
  • போலீசார் கோவில்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்
  • 50- க்கு மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்த ஏற்பாடு

நாகர்கோவில்:

குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடக்கிறது. நாளை 15-ந்தேதி காலை 9 மணிக்கு கலெக்டர் அரவிந்த் கொடியேற்றி வைக்கிறார்.

பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.இதைத் தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடக்கிறது. சுதந்திர தின விழா நடைபெறும் அண்ணா விளையாட்டரங்கம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.அண்ணா ஸ்டேடியத்தில் மெட்டல் டிடெக்டர் வாசல் அமைக்கப்பட்டுள்ளது. போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்றும் நடந்தது.

சுதந்திர தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

முக்கிய சந்திப்புகள், அரசு அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.போலீசார் இரவு நேர ரோந்து பணியையும் தீவிர படுத்தியுள்ளனர்.இரண்டு ஷிப்டுகளாக பிரிக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இரவு போலீசார் ரோந்து சுற்றி வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

நாகர்கோவில் நாகராஜா கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உள்பட முக்கிய கோவில்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாசல்களில் மெட்டல் டிடெக்டர் வாசல் போடப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

கன்னியாகுமரி, நாகர் கோவில், மார்த்தாண்டம் பகுதியில் உள்ள லாட்ஜு களில் 2-வது நாளாக சோதனை நடத்தப்பட்டது. நாகர்கோவில் ெரயில் நிலை யத்திலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார் கள். ெரயில் நிலைய வாசலில் மெட்டல் டிடெக்டர் வாசல் அமைக்கப்பட்டுள்ளது. ெரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் முழுமை யான சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வரு கிறார்கள். பயணிகளின் உடைமைகள் முழுவதும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஆரல்வாய்மொழி, களியக்காவிளை, அஞ்சு கிராமம் சோதனை சாவடி களில் கூடுதல் போலீ சார் நியமிக்கப்பட்டு வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங் களிலும் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. கடற்கரை கிராமங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து போலீ சார் சோதனை மேற் கொண்டு உள்ளனர்.

மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 50- க்கு மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News