கால்வின் மருத்துவமனை நடத்திய மராத்தான் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள்
- மராத்தான் போட்டியில் கொட்டும் மழையிலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
- மராத்தான் ஓட்டம் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கில் நிறைவு பெற்றது.
நாகர்கோவில் :
உலக இதய தினத்தை முன்னிட்டு வருடந்தோறும் மாணவர்கள் மற்றும் முதியவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மராத்தான் ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மறவன்குடியிருப்பு கால்வின் மருத்துவமனை சார்பில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கான மராத்தான் போட்டி நடைபெற்றது. பட்டகசாலியன்விளையில் இருந்து தொடங்கிய மராத்தான் ஓட்டம் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கில் நிறைவு பெற்றது.
அங்கு மராத்தானில் பங்கு பெற்றவர்களுக்க போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன் பரிசுகளை வழங்கினார். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஜெர்சி, காலை உணவு, பரிசுகள், பதக்கங்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ், டாக்டர்கள் கால்வின் டேவிட்சன், பினு லா கிறிஸ்டி, ஹனுஷ்ராஜ் பதக்கங்கள் மற்றும் பாராட்டு பத்திரங்களை வழங்கினர். அகஸ்டின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மராத்தான் போட்டியில் கொட்டும் மழையிலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.