உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு 10 சக்கரங்களுக்கு மேற்பட்ட வாகனங்களில் கனிமங்கள் ஏற்றி செல்ல தடை

Published On 2023-09-13 06:34 GMT   |   Update On 2023-09-13 06:34 GMT
  • கலெக்டர் ஸ்ரீதர் அறிவிப்பு
  • மேற்படி விதிமுறைகள் 15-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது

நாகர்கோவில் :

குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மோட்டார் வாகன சட்டம் துணை விதி (1) விதி 370 தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டவிதி 1989-ன் படி போக்குவரத்து ஆணையர் ஒப்புதல் பெறப்பட்டுள்ள தன் அடிப்படையில் எல்லையோர மாவட்டங்க ளான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து கனிமங்கள் ஏற்றி வரும் 10 சக்கரங்களுக்கு (28,000 கிலோ) மேற்பட்ட கனரக வாகனங்கள் குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் 10 சக்கரங்களுக்குட்பட்ட கனரக வாகனங்களில் கனிமங்கள் கொண்டு வரும் வாகனங்கள் கீழ்கண்ட வழித்தடத்தில் மட்டுமே சென்றுவர அனுமதிக்கப்படு கிறது. ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், துவரங்காடு, களியங்காடு வழியாக கேரள மாநிலம் செல்வதற்கு (அல்லது) வெள்ளமடம், காவல்கிணறு, ஆரல்வாய்மொழி, தோவாளை, அப்டா மார்க்கெட், புத்தேரி, இறச்சகுளம், களியங்காடு செல்வதற்கு அனுமதிக்கப்ப டுகிறது. மேற்படி விதிமுறைகள் 15-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதிக எடை கொண்ட வாகனங்களின் போக்குவரத்தால் சாலைகள் பாதிப்படைவதையும், பொதுமக்கள் நலன்கருதியும் இந்த விதிமுறைகள் நடைமுறை படுத்தப்படுகி றது. இந்த விதிகளை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News