உள்ளூர் செய்திகள் (District)

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் - குமரி ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

Published On 2022-06-18 08:32 GMT   |   Update On 2022-06-18 08:32 GMT
  • பிளாட்பாரங்களில் தீவிர கண்காணிப்பு
  • குழித்துறை, இரணியல், வள்ளியூர், நாங்குநேரி ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்:

இந்திய ராணுவத்தில் உள்ள முப்படைகளில் இளம் வீரர்களை அதிகளவில் சேர்ப்பதற்கான புதிய 'அக்னிபத்' ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது.

இத்திட்டத்தின் கீழ் ராணுவம், விமானப்படை, கடற்படையில் சேரும் 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள்.

4 ஆண்டு கால சேவை முடிந்த பின் அக்னிபத் திட்டத்தில் சேரும் வீரர்களில் 25 சதவீதம் பேர் ராணுவத்தில் நிரந்தரமாக 15 ஆண்டு ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். அரசின் அக்னிபத் ராணுவ வீரர்கள் ஒப்பந்த சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் ராணுவத்தில் சேர பயிற்சி பெற்று வந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பீகார் மாநிலம் சமஸ்திபூரில் பயணிகள் ரெயிலின் 2 பெட்டிகளுக்கு இளைஞர்கள் தீ வைத்தனர்.தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரெயில் நிலையத்திலும் ரெயில் பெட்டிகளுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்திலும் பாது காப்பை பலப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது. இந்த நிலையில் சென்னையில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாலிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதையடுத்து குமரி மாவட்டத்திலும் கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கேத்ரின் சுஜாதா தலைமையில் பாதுகாப்பு பணியில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பிளாட்பாரங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள். ரெயில் நிலைய வாசல்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. ரெயில் நிலையத்திற்கு வந்த வட மாநில தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.

இதேபோல் கன்னியாகுமரி ரெயில் நிலையத்திலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். குழித்துறை, இரணியல், வள்ளியூர், நாங்குநேரி ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News