இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முகவரி வெளியீடு - நெசவாளர் குறைதீர்க்கும் மையத்தில் புகார்கள் அனுப்பலாம் - கலெக்டர் அரவிந்த் தகவல்
- நெசவாளர் குறை தீர்க்கும் மையத்திற்கென முகமை அலுவலர், குறை தீர்க்கும் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- குறை தீர்க்கும் அலுவலரை அரசு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரடியாக சந்தித்து தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:-
2021-2022 ம் ஆண்டின் கைத்தறி துறையின் மானியக்கோரிக்கையின் போது கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரால் கைத்தறி ஆணையரகத்தில் 'நெசவாளர் குறை தீர்க்கும் மையம் அமைக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. இந்த நெசவாளர் குறைதீர்க் கும் மையமும், இதற்கென உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக மனுக்களை பரிசீலிக்கும் இணையதள மும் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரால் 23.03.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
நெசவாளர் குறை தீர்க்கும் மையத்திற்கென முகமை அலுவலர், குறை தீர்க்கும் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நெசவாளர்குறை தீர்க் கும் மையமானது அரசின் பல்வேறு நெசலாளர் நலத்திட்டங்களில் உறுப்பினராக சேர்த்தல், உறுப்பினர் சேர்க்கையில் ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் இதர கோரிக்கைகளான வேலைவாய்ப்பு கோருதல், கூலி உயர்வு வழங்க கோருதல், முதியோர் ஓய் வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளை தெரிவித்து உடனுக்குடன் தீர்வு பெறும் வகையில் தெரிவிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. குறை தீர்க்கும் அலுவலரை அரசு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரடியாக சந்தித்து தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இதற்கென உருவாக்கப்பட்ட இணையதள முகவரி: https://gdpt. tn.gov.in/dhl. பிரத்தியேக இணையதளத்தில் நெச வாளர்கள் தங்கள் குறைகளை பதிவேற்றம் செய்யலாம்.
அரசு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிவரை தொலைபேசி எண் 044-25340518 மூலம் தெரிவிக்கலாம். நெசவா ளர் குறை தீர்க்கும் மையத் தின் மின்னஞ்சல் முகவரி: wgrcchennai@gmail.com, mail to : wgrcchennai@gmail. com நெசவாளர் குறை தீர்க்கும் மையம், கைத்தறி ஆணையரகம், குறளகம் 2-ம் தளம், சென்னை-104 என்ற முகவரிக்கு துணை இயக்குநர் (அமலாக்கம்)/ குறை தீர்க்கும் அலுவல ருக்கு முகவரியிட்டு கடிதம் மூலமாக தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.