தமிழகத்தில் ராகுல்காந்தியின் பாத யாத்திரை இன்றுடன் நிறைவு
- முளகுமூட்டில் தொடங்கி களியக்காவிளை சென்றடைகிறார்
- வழி நெடுக செல்பி எடுத்து தொண்டர்கள் உற்சாகம்
நாகர்கோவில்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார்.
கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி பாதயாத்திரை தொடங்கிய ராகுல் காந்தி நேற்று இரவு முளகுமூடு பகுதியில் தங்கினார். இன்று 4-வது நாளாக முளகுமூட்டில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கினார். முன்னதாக பள்ளி வளாகத்தில் ராகுல் காந்தி தேசிய கொடி ஏற்றி வைத்தார். பின்னர் பள்ளி குழந்தைகளுடன் கலந்துரை யாடியதுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து காலை 7.05 மணிக்கு பாதயாத்திரை தொடங்கியது. வெள்ளை சீருடையுடன் தேசிய கொடியை ஏந்தியவாறு நிர்வாகிகள் முன் சென்றனர். தொடர்ந்து செண்டை மேள கலைஞர்கள் முன் செல்ல ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டார்.
மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி திக் விஜய் சிங், மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், விஜய்வசந்த் எம்.பி., ஜோதிமணி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ராபர்ட் புரூஸ் ஆகியோரும் உடன் வந்தனர்.முளகுமூடு பகுதியில் ஏராளமான சிலம்பாட்ட கலைஞர்கள் ராகுலை வரவேற்க காத்திருந்தனர். அவர்கள் ராகுல்காந்தியை கண்டதும் சிலம்பம் ஆடினர்.
அதனை ரசித்த ராகுல் காந்தி பின்னர் சிலம்ப கலைஞர்களை அருகில் அழைத்து பாராட்டினார். இதுபோல சாலையோரம் நின்ற சிறுமி ஒருவரை அழைத்து ராகுல் காந்தி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்ட சாலையின் இருபுறமும் தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். வீடுகளின் மாடிகளில் இருந்தும் பெண்கள் குழந்தைகள் ராகுல் காந்தியை பார்த்து கை அசைத்தனர். ராகுல்காந்திக்கு ஒவ்வொரு சந்திப்பிலும் செண்டை மேளம், சிங்காரி மேளம், மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராகுல்காந்தி பயணம் செய்த பாதையோரம் ஏராள மான பள்ளி மாணவிகளும் அவரை பார்க்க காத்திருந்தனர். ராகுல்காந்தி வந்ததும் அவர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினர். அவர் களில் சிலர் செல்போன்களை உயர்த்திக் காட்டி செல்பி எடுக்க வேண்டுமென்று கேட்டனர்.
அவர்களை பார்த்து புன்முறுவல் செய்த ராகுல்காந்தி, பாதுகாப்பு அரணை தாண்டி சென்று மாணவிகளுடன் செல்பி எடுத்துக் கொண்டார். விருப்பம் நிறைவேறிய மகிழ்ச்சியில் மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்.
இன்று காைல முளகுமூட் டில் தொடங்கிய ராகுலின் பாத யாத்திரை மார்த்தாண்டம் நேசமணி கல்லூரியில் காலை 9.10 மணிக்கு சென்றடைந்தது. அங்கு ஓய்வு எடுக்கும் ராகுல்காந்தி இன்று மாலை 3 மணிக்கு களியக்காவிளை சென்று அடைகிறார்.
ராகுல்காந்தி மேற்கொண் டுள்ள இந்திய ஒற்றுமை பயணம் தமிழகத்தில் 4 நாட் கள் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. அதன்படி, கன்னியாகுமரியில் கடந்த 7-ந்தேதி தொடங்கிய பாத யாத்திரை இன்று குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை சென்று அடைகிறது. இன்றிரவு களியக்காவிளை அருகே கேரள எல்லை பகுதியான செறுவாரக்கோணத்தில் நிறைவு செய்கிறார். அதன்படி, ராகுலின் தமிழக சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
நாளை முதல் ராகுல்காந்தியின் கேரள பாத யாத்திரை தொடங்கு கிறது. அங்கு 18 நாட்கள் அவர், பாத யாத்திரை மேற் கொள்கிறார். இன்று கேரள எல்லையை நெருங்க நெருங்க ராகுலுக்கு தமிழிலும், மலையாளத்திலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.