உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் ரெயில் முன்பு ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-09-19 07:36 GMT   |   Update On 2022-09-19 07:36 GMT
  • ரெயிலில் ஏ.சி. பெட்டிகளில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்
  • ரெயில்வே எஸ்.ஆர்.எம். யு. தொழிற்சங்கம் சார்பில் கன்னியாகுமரி புனே ரெயில் நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்தபோது அந்த ரெயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

நாகர்கோவில் :

கன்னியாகுமரியில் இருந்து புனேக்கு தினசரி ரெயில் சென்று வருகிறது. இந்த ரெயிலில் ஏ.சி. பெட்டிகளில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களை மாற்றம் செய்துவிட்டு இன்று முதல் அதனை பராமரிக்கும் பொறுப்பை தனியாருக்கு ரெயில் நிர்வாகம் வழங்கியதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில்வே எஸ்.ஆர்.எம். யு. தொழிற்சங்கம் சார்பில் கன்னியாகுமரி புனே ரெயில் நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்தபோது அந்த ரெயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏ.சி. பிரிவு தொழிலாளர்களை மாற்றம் செய்யக்கூடாது, தொடர்ந்து அவர்கள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும், தனியாருக்கு அந்த பிரிவை மாற்றம் செய்யக்கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

Tags:    

Similar News