உள்ளூர் செய்திகள் (District)

குளச்சல் அருகே 20 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பாம்பு மீட்பு

Published On 2023-05-30 06:56 GMT   |   Update On 2023-05-30 06:56 GMT
  • சுமார் 7 அடி நீளமுள்ள சாரை பாம்பு கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்
  • அவர் வலையில் சிக்கியிருந்த பாம்பை உயிருடன் மீட்டார்.

கன்னியாகுமரி:

குளச்சல் அருகே பத்தறையில் ரிஷியிருப்பு சாஸ்தா கோயில் உள்ளது.இது தனியாருக்கு சொந்தமான கோயில்.தற்போது அங்கு கிணறு தோண்டும் பணி நடந்து வருகிறது.20 அடி ஆழம் கிணறு தோண்டப்பட்டுள்ளது.

நேற்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் கிணறு தோண்டுவதற்கு வந்தனர்.அப்போது கிணற்றுக்குள் சுமார் 7 அடி நீளமுள்ள சாரை பாம்பு கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.தவளையை இரைக்காக துரத்தி செல்லும்போது பாம்பு தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

கிணற்றுக்குள் பாம்பு விழுந்து கிடந்ததைக்கண்ட தொழிலாளர்கள் வேலையை நிறுத்தி விட்டு திரும்பி சென்றனர்.பின்னர் காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் வனச்சரக ஊழியர் சம்பவ இடத்தை பார்வையிட்டார். இன்று காலை மீண்டும் பத்தறைக்கு வந்த அவர் வலையில் சிக்கியிருந்த பாம்பை உயிருடன் மீட்டார்.பின்னர் பாம்பு குலசேகரம் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.

கிணற்றுக்குள் பாம்பு விழுந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News