உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் சீசன் கடைகள் அமைக்க அனுமதிக்க வேண்டும்

Published On 2022-07-30 07:41 GMT   |   Update On 2022-07-30 07:41 GMT
  • சிறப்புநிலை பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
  • சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசனையொட்டி நடவடிக்கை

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி கூட்டம் தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது.துணைத் தலைவர்ஜெனஸ்மைக்கேல், செயல் அலுவலர் ஜீவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதீர்மானங்கள்வருமாறு:-

கன்னியாகுமரி பேரூ ராட்சிக்கு உட்பட்ட கடற்கரைச் சாலையில் ஆண்டு தோறும் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசனை யொட்டி நவம்பர் மாதம் 20-ந்தேதி முதல் ஜனவரி 20-ந்தேதி வரையிலான 60 நாட்கள் சீசன் காலத்தில் தற்காலிக சீசன் கடைகள் அமைப்பது வழக்கம். இதன் மூலம் பேரூராட்சிக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் வருவாய் கிடைத்து வந்தது.

இந்தநிலையில் 2019 -2022-ம் ஆண்டில் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு, 2020-ம் ஆண்டு முதல் கடைகள் ஏலம் விடக்கூடாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த பகுதியில் கடைகள் ஏலம் விடப்படவில்லை. இதனால் பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டில் சீசன் கடைகளுக்கான பொது ஏலம் விடுவதற்கு ஆவன செய்யுமாறு மாவட்ட கலெக்டருக்கு கருத்துரு அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது.

கன்னியாகுமரி பேரூ ராட்சிக்குச் சொந்தமான சன்னதி தெரு சமுதாயக் கழிப்பிடத்தில் அமைந்து உள்ள செல்பேசி கோபு ரத்தை அகற்றி அந்த இடத்தில் புதிதாக காங்கி ரீட் கழிப்பிடம் மற்றும் குளியலறை அமைப்பதுஎன்றுமுடிவுசெய்யப்பட்டது. காந்தி மண்டபம் மற்றும் காமராஜர் மணி மண்டபம் அமைந்துஉள்ள பகுதிகளை நிர்வாகம் செய்யும் பொறுப்பை பேரூராட்சிக்கு வழங்க மாவட்ட கலெக்டரைக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேற்கண்ட தீர்மா னங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த

கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் சி.எஸ்.சுபாஷ், ஆனிரோஸ் தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News