உள்ளூர் செய்திகள் (District)

குமரியில் இதுவரை 53 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-08-18 08:58 GMT   |   Update On 2022-08-18 08:58 GMT
  • கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்
  • குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள். ஏற்கனவே இந்த ஆண்டு இதுவரை 52 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் பி.டி. செல்லப்பன். அ.தி. மு.க. பிரமுகர். இவரது மகனை கடத்தி சென்று கொலை செய்த வழக்கில் நாகர்கோவில் வடசேரி புதுக்குடியிருப்பு காமராஜபுரத்தை சேர்ந்த ஜோஸ்பெ வின் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்து இருந்தனர்.

இவர் மீது ஏற்கனவே கன்னியாகுமரி,வடசேரி போலீஸ் நிலையத்தில் வழக்குகள் இருந்தது. இதையடுத்து இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து ஜோஸ்பெ வின் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்து உள்ளது.

Tags:    

Similar News