கொட்டாரத்தில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
- பேரூராட்சி தலைவி தொடங்கி வைத்தார்
- விழிப்புணர்வு நாட்டிய நடன நிகழ்ச்சிகளும் ஓரங்க நாடக நிகழ்ச்சியும் நடந்தது.
கன்னியாகுமரி:
கொட்டாரம் முதல் நிலை பேரூராட்சி சார்பில் தமிழ்நாடு பேரூராட்சிகள் ஆணையரகம் மூலம்கொரோனா வைரஸ் தொற்று, டெங்கு காய்ச்சல் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி கொட்டாரம் சந்திப்பில் உள்ள காந்தி திடலில் நேற்று மாலை நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கொட்டாரம் முதல் நிலை பேரூராட்சி செயல் அலுவலர் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவி செல்வகனி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவி விமலா பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் தங்ககுமார், பொன்முடி, கிறிஸ்டோபர்சந்திரமோகன், நாகம்மாள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பரதாலயா கலைக் குழுவினர் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு நாட்டிய நடன நிகழ்ச்சிகளையும் ஓரங்க நாடக நிகழ்ச்சியையும் நடத்திக்காட்டினார்கள்.