அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டி
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
- கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நடந்தது
கன்னியாகுமரி :
முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி யின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகம் சார்பில் மாதந்தோறும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் ஒன்றாக இந்த மாதம் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கலைஞரும் சங்கத்தமிழும் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
தமிழ் ஆசிரியர் சிவதாணு, ஆசிரியை குறமகள் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். போட்டியில் மாணவர் அண்ணாமலை, மாணவிகள் சுப்பிரஜா, ஜியுபிளமிங், ஆஸ்லின் அபீஷ்மா, ஆன்றனி வித்யா ஆகியோர் வெற்றி யாளர்களாக அறிவிக்கப்பட்ட னர்.
தொடர்ந்து பிற்பகலில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் "அமரர் கலைஞருக்கு சூட்டும் வெண்பா மலர் 100" என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கவிஞர் கவிமணி தாசன் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஓவியர் வை.கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி தலைமை தாங்கினார். பன்னாட்டு தமிழ் உறவு மன்ற இளங்கோ நூலினை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். கலைவாசல் அமைப்பின் தலைவர் குமரி எழிலன் நூல் ஆய்வுரை நிகழ்த்தினார்.
நூலாசிரியர் கவிமணி தாசன் நற்பணி இயக்கத்தின் பொதுச்செயலாளர் புலவர் சிவதாணு ஏற்புரை ஆற்றி னார். அதைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.
முடிவில் ஆசிரியை குறமகள் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி அரசு அருங் காட்சியக பணியாளர்கள் செய்து இருந்தனர்.