உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் அடுத்த கல்வியாண்டில் தேர்ச்சி விகிதத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

Published On 2023-05-08 08:51 GMT   |   Update On 2023-05-08 08:51 GMT
  • புதிதாக பொறுப்பேற்ற முதன்மை கல்வி அலுவலர் முருகன் பேட்டி
  • தேர்ச்சி விழுக்காடை அடுத்த கல்வியாண்டில் மேலும் அதிகரிக்க நடவடிக்கை

நாகர்கோவில் :

குமரி மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்த புகழேந்தி, திருவாரூர் மாவட்டத்திற்கு மாற்றப் பட்டார். இதையடுத்து புதிய முதன்மை கல்வி அதிகாரி யாக சேலம் மாவட்ட கல்வி அதிகாரி முருகன் நியமனம் செய்யப்பட்டார்.

அவர் இன்று நாகர்கோவிலில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு தொடக்க கல்வி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதன்மை கல்வி அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி விழுக்காடு குறித்த விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் முதன்மை கல்வி அலுவலர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 97.05 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி விழுக்காடை அடுத்த கல்வியாண்டில் மேலும் அதிகரிக்க நட வடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு பள்ளிகளில் எந்தெந்த பள்ளிகள் எவ்வளவு தேர்ச்சி பெற்றுள்ளது, தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க பள்ளிகளில் இன்னும் என்னென்ன நடவடிக்கை கள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News